![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ajith : சக பைக்கிங் பார்ட்னருக்கு அஜித் செய்த உதவி.. வாவ் சொல்லும் ரசிகர்கள்..
பந்தா இல்லாமல், முழுமனதாக உதவி செய்த அஜித், வாழ்க்கை குறித்த என் பார்வையை மாற்றிவிட்டார்
![Ajith : சக பைக்கிங் பார்ட்னருக்கு அஜித் செய்த உதவி.. வாவ் சொல்லும் ரசிகர்கள்.. Bike rider shares a photo with Ajith and penned his thoughts on Ultimate star in his instagram page Ajith : சக பைக்கிங் பார்ட்னருக்கு அஜித் செய்த உதவி.. வாவ் சொல்லும் ரசிகர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/19/7c4b514cf12a32dbdd8f05b34d25f1da1663589910742102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பைக், ஆட்டோ, கார், ஹெலிகாப்டர் என அனைத்து வாகனங்களை செயல்படுத்துவதில் வல்லமை பெற்றவர் அஜித்குமார். இதற்கு முக்கிய காரணம், அவருக்குள் இருக்கும் ஆர்வமும், விவேகமும்தான். அஜித்திற்கு நடிப்பை தாண்டி பல திறமைகள் உள்ளது. அனைவருக்கும் மனதளவில் உதவி செய்பவர் அஜித், என்று பிரபலங்கள் பேசி கேள்வி பட்டிருப்போம். இது, போல் அஜித்திடம் உதவி பெற்றவர் ஒருவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“பைக்கிங் சென்றபோது, என் பைக் பழுதானது. உதவிக்காக காத்திருந்த வேலையில், அஜித் அந்த பக்கம் வந்தார், அவரிடம் உதவி கேட்டேன். அப்போது ஹை, என் பெயர் அஜித் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின், என் பைக்கை அவரே பழுது பார்த்தார். சில மணி நேரங்களுக்கு, பைக்கில் பயணம் செய்தோம். டீ சாப்பிட அவரை அழைத்தேன், எந்தவொரு சலிப்பும் இல்லாமல் 10 நிமிடங்களுக்கு பைக்கிங் குறித்து பேசினோம்.இந்த ஒரு கதையை நான் சொல்வதற்கு இரு காரணம்தான்.எந்தவொரு பந்தாவும் இல்லாமல், ரசிகர்கள் மீது அன்பை செலுத்துபவர் அஜித்.
இந்த நாளை நான் மறக்க மாட்டேன். எனது பார்வையை மாற்றியவர் அஜித்.” என்று குறிப்பிட்டுருந்தார் அந்த வாலிபர்.
அஜித்குமார் பைக்கிங் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர் என நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஷூட்டிங் சமயத்திலும் பைக்கிங் செய்யவேண்டும் என்றால் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் தானே அந்த காட்சிகளில் நடிப்பார் என்பதையும் நாம் அறிவோம். AK 61 படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்ற போதும், நீண்ட பைக் சவாரி செய்தார்.
View this post on Instagram
முன்னதாக AK 61 படப்பிடிப்பில் இருந்து திரும்பிய அஜித்குமார் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்தார். இமயமலை பயணத்தின் போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. இது வருடத்தில், பல நாட்களை பைக்கிங்காகவே
செலவழித்து இருக்கிறார். அதுபோல், அவ்வப்போதும் மற்ற நாடுகளுக்கும் டூர் சென்று வருகிறார் அஜித்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)