பாருவ முதுகுல குத்திட்டாங்க...விஜே பார்வதிக்கு ரெட் கார்ட்! பொங்கி எழுந்த வாட்டர்மெலன் ஸ்டார்
BiggBoss Tamil 9 : விஜே பார்வதிக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது குறித்து வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர் வருத்தம் தெரிவித்துள்ளார்

கடந்த வார பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பம் எடுத்தது. ஒரே நேரத்தில் விஜே பார்வதி மற்றும் கமருதின் ஆகிய இருவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டு போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டனர். ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் . ஆனால் பிக்பாஸ் வீட்டில் விஜே பார்வதியின் நெருங்கிய நண்பராக இருந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது கொடுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. கானா வினோத் , அரோரா சின்க்ளேர் , திவ்யா கணேஷ் , சாண்ட்ரா , விக்கல்ஸ் விக்ரம் , சபரிநாதன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவை நோக்கி நகர்கிறார்கள். இந்த ஆறு பேரில் யார் டைட்டில் வின்னர் பரிசை தட்டிச்செல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகிறார்கள்.
ரெட் கார்ட் வாங்கிய விஜே பார்வதி மற்றும் கமருதின்
கடந்த வாரம் வரை பிக்பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருந்து வந்தனர். இதில் விஜே பார்வதி மற்றும் கமருதின் ஆகிய இருவருக்கும் அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார் விஜய் சேதுபதி. கார் டாஸ்க்கின் போது விஜே பாருவும் கமருதினும் சேர்ந்து சாண்ட்ராவை காரில் இருந்து உதைத்து தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சீசனில் அதிகளவில் விமர்சனங்களை சந்தித்த இரு போட்டியாளர்களாக விஜே பார்வதியும் கமருதினும் இருந்து வந்தார்கள். இப்படியான நிலையில் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு பேருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. இருவரும் ரெட் கார்ட் வழங்கப்பட்டதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியதோடு விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்
பாருவுக்கு ஆதர்வு தெரிவித்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
விஜே பார்வதிக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது குறித்து அவரது நெருங்கிய நண்பராக இருந்த வாட்டர்மெலன் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது விஜே பார்வதி மற்றும் திவாகர் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர். இருவரது உரையாடல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின. பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது குறித்து வாட்டர்மெலன்ன் ஸ்டார் பத்திரிகையாளர்களிடம் பேசினார் . அப்போது " ``நம்ம மதுரை பொண்ணுக்கு ரெட் கார்டு கொடுத்தது ரொம்ப கஷ்டமா இருக்கு. சாண்ட்ரா வேணும்னே கோபத்த தூண்டுறாங்க. பார்வதியும் எவ்ளோ தான் கண்ட்ரோல் பண்ணுவாங்க. இதுக்கு முன்னாடி துஷார கானா வினோத் தள்ளி விட்டாரு. ஏன் பார்வதிய சபரி என்ன பண்ணாருனு பாத்தோம். கேம்னா கேமா பாக்கணும். சாண்ட்ரா பார்வதிய நல்லா யூஸ் பண்ணிட்டு, கடைசியில முதுகுல குத்திட்டாங்க’’ என தெரிவித்தார்





















