மேலும் அறிய
Advertisement
Bigg Boss 8: அடேங்கப்பா! இவ்வளவு சின்னத்திரை பிரபலங்களா... இது பிக் பாஸா? சீரியலா... வைரலாகி வரும் பட்டியல்
Bigg Boss 8 : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் என ஒரு லிஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் யாரு யாரு இருக்க பாருங்க...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளிலேயே அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட ஒரு ஃபேவரட்டான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தான். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சீசனுமே பரபரப்பு குறையாமல் மிகவும் சிறப்பாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. அந்த வகையில் கடந்த ஏழாவது சீசனில் போட்டியாளர்களாக இருந்த மாயா, பூர்ணிமா விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியின் கவனத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார்கள். கடந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற ரன்னர் அப்பாக மணி சந்திரா வெற்றி பெற்றார்.
உலக நாயகன் கமல்ஹாசனுக்காகவே இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை இனி தன்னால் தொகுத்து வழங்க இயலாது என்பதை அறிக்கையின் மூலம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார் நடிகர் கமல்ஹாசன். இதனால் இந்த நிகழ்ச்சியை இனி வரும் சீசன்களில் யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. நடிகர் சரத்குமார், சிம்பு, விஜய்சேதுபதி, நயன்தாரா என பலரும் இந்த நிகழ்ச்சி ஹோஸ்ட் ஆக வரக்கூடும் என சமூக வலைத்தளங்கள் எங்கும் செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதுவரையில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களுக்கான ஆடிஷன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கும் நபர்களின் பட்டியலில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்கள் இடம் பிடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
டிடிஎஃப் வாசன், அவரது காதலியும் குக்கு வித் கோமாளி புகழ் ஜோயா, நடிகர் ரஞ்சித், 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அருண், குரேஷி, ரியாஸ் கான், ஸ்டார் பட ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன், பூனம் பஜ்வா, மாகாபா ஆனந்த் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வமான பட்டியல் வெளியானால் மட்டுமே பிக் பாஸ் 8 வீட்டுக்குள் போக போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் தெரிய வரும்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion