![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் நிரூப்! வைரல் போட்டோ
யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலரும் இந்நாள் பிக்பாஸ் போட்டியாளருமான நிரூப் மற்றொரு பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
![பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் நிரூப்! வைரல் போட்டோ Yashika Anands Ex boyfriend close with another bigg boss contestant, picture got viral! பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் நிரூப்! வைரல் போட்டோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/ad043af65faeb7dd155f0eb8e4094728_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒருமுறை யாஷிகா வெளியிட்ட வீடியோவில் போகிறபோக்கில் அவருக்கு லிப் கிஸ் அடித்த ஒரு ஆண் பற்றி அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. யார் யாருக்கு முத்தம் கொடுத்தவர் என தேடிய போதும் அவரைப் பற்றிய பெரிய தகவல்கள் இல்லை. ஆனால் அவர்தான் இந்த பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் என்பது இப்போதுதான் தெரியவருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் தான் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தினங்கள் முன்பு பிக்பாஸில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் தான் நான் என தனது அறிமுகத்தை நிரூப் ஆரம்பிக்கும் போதே ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கவனத்தையும் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார் நிரூப். இந்த இடத்திற்கு வர காரணமே யாஷிகா ஆனந்த் தான் என்றும் மீடியாவில் தனக்கு யாரையும் தெரியாது என்றும் இந்த நிலைமைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியது அவள் தான் என்றும் யாஷிகா பற்றி மிகவும் உருக்கமாக பேசியிருந்தார் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்.
நிரூப்பும் யாஷிகா ஆனந்தும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது காதலை சுமூகமாக பேசி முடித்துக்கொண்டார்கள். முடித்துக்கொண்டாலும் அது சண்டையில் நெகட்டிவாக இல்லாமல் ஆரோக்கியமான நிலையில் இருந்துவந்தது. இது குறித்து யாஷிகா ஆனந்தும் பேசியுள்ளார். நிரூப்பும் யாஷிகா இப்போதும் கூட சினிமாவில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று கூறி இருக்கிறார். பிக்பாஸில் கூட அவரது முன்னாள் காதலன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த நிலையில், நிரூப் வேறொரு பிக்பாஸ் போட்டியாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3ல் பங்குகொண்ட அபிராமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து வைரலாகி கொண்டிருக்கின்றன. அந்த வைரல் புகைப்படத்தில் நிரூப்பின் மேல் அபிராமி சாய்ந்துகொண்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக 'You Are Mine' (நீ என்னுடையது) என்று எழுதி உள்ளார். இந்த புகைப்படம் வைரலானதை ஒட்டி, இருவரும் காதலில் இருக்கின்றனரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் பிக்பாஸ் சீசன் 3ல் அபிராமி முகனிடம் ப்ரொபோஸ் செய்தார், ஆனால் முகன் யாஸ்மின் நதியா கதையை சொன்னதும் உடைந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் நிரூப் நிச்சயம் டஃப் ஆன போட்டியாளராகவும் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனது போல ரன்னர் அப் ஆவதற்கும் நிரூப்பிற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)