பிக்பாஸ் பிரபலம் அபினய் பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய மனைவி! காரணம் என்ன? குழப்பத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அபினய் மற்றும் பாவனியின் நடவடிக்கையில் சந்தேகம் இல்லை , நான் எனது கணவனை நம்புவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்
பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் அபினய்யின் மனைவி தனது இன்டஸ்டகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவர் பெயரை நீக்கியிருப்பது ரசிகர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? எனத்தெரிந்துக்கொள்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரனான அபினய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து அபினய்க்கு சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய துறையை மாற்றியதோடு தற்போது விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக களம் இறக்கப்பட்டார். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பான சென்ற பிக்பாஸ் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இருந்தப்போதும் பிக்பாஸ் என்றாலே எப்போதும் பரப்புகளுக்கும்,சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை இந்த சீசன் 5 வெளிப்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகள் மலர்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லை என்றாலும் அபினய் மற்றும் பாவனியின் நடவடிக்கைகளைப் போட்டியாளர்கள் சந்தேகித்தனர். இதோடு மட்டுமின்றி ராஜூ நேரடியாக நீங்களும் பாவனியும் காதலிக்கிறீர்களா? என கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பார்வையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து அபினய் மற்றும் பாவனி இருவருமே வாய் திறக்காத நிலையில் தான் தொகுப்பாளர் கமல்ஹாசன் இருவரையும் கண்டித்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அபினய் மனைவி அபர்ணா இன்ஸ்டாவில், தனக்கு அபினய் குறித்து நன்றாக தெரியும் என்றும் அவரை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என அபினய்க்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அபினய் வெளியேறினார். இவர் போட்டியை விட்டு வெளியேறியதும் என்ன நடக்கப்போகிறது என எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகளவில் ஏற்பட்டது.
அதேப்போல் தான், ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படியான நிகழ்வு அரங்கேறியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அபினய் மற்றும் பாவனியின் நடவடிக்கையில் சந்தேகம் இல்லை , நான் எனது கணவனை நம்புவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் அபர்ணா. ஆனால் தற்போது இன்ஸ்டாவில் அபர்ணா அபினய் என்ற தனது பெயரை அபர்ணா வரதராஜன் என மாற்றியுள்ளார். இந்த பெயர் நீக்கம் ரசிகர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் அபினய் குடும்பத்தில் நடந்தது என்ன? பிரச்சனைக்கு யார் காரணம்? அபினய் மற்றும் அபர்ணா பிரியப்போகிறார்களா? என்பது குறித்த பல கேள்விகளுக்கு யார் விளக்கமளிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.