Bigg Boss Tamil Season 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!
Bigg Boss Tamil Season 8 Eviction: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. கடந்த ஏழு சீசனாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக தற்போது, பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கமலுக்கு பதில் விஜய் சேதுபதி:
ஆரம்பத்தில், விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க போகிறாரோ? என்கிற அச்சம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில், முதல் நாளே தன்னுடைய அசத்தலான ஆக்கரிங்கால் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஸ்டைல் மற்றும் அவர் போட்டியாளர்களிடம் எழுப்பும் கேள்விகள், மிகவும் வெளிப்படையாக உள்ளதாக பலர் ஆரம்பத்தில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
விஜய் சேதுபதிக்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்:
ஆனால் கடந்த சில வாரங்களாக, ஒரு சிலர் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்து வருகிறார்கள். இதற்கு காரணம் போட்டியாளர்கள் யாரையும் விஜய் சேதுபதி பேச அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் தரப்பில் இருந்து ஏதாவது போட்டியாளர்கள் பேச முயற்சி செய்தால் கூட , 'நன்றி தயவு செய்து உட்காருங்க' என கூறி அவர்கள் வாயை அடைத்து விடுகிறார். விஜய் சேதுபதியின் இந்த செயல் ஒரு சிறந்த தொகுப்பாளருக்கான அழகு இல்லை. கமலஹாசன் போட்டியாளர்கள் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதனை மிகவும் நாசுக்காக கையாளுவார். அவரை பார்த்து விஜய் சேதுபதி கற்றுக்கொள்ள வேண்டும் என தங்களின் கோப தாபங்களை வெளிக்காட்டி வந்தனர்.
எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட்:
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவிலேயே, வீட்டின் உள்ளே 17 போட்டியாளர்கள் இருப்பதால், டபுள் எவிக்ஷன் இருப்பதாய் உறுதி செய்தார் விஜய் சேதுபதி. மேலும் மக்களின் வாக்குகளின் படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் தர்ஷிகா ஆகியோர் மிகவும் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எலிமினேஷனில் நடந்த ஒரு ட்விஸ்ட் காரணமாக யாருமே எதிர்பாராத ஒரு போட்டியாளர் இன்று வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்:
கடந்த இரண்டு வாரமாக, கடைசி இடத்தில் இருந்தும், விஜய் சேதுபதியால் சேவ் செய்யப்பட்டு வருகிறார் சாச்சனா என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் சாச்சனா தான் வெளியேறியுள்ளார். இந்த வாரம் சாச்சனா வெளியேற வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி சாச்சனாவை காப்பாற்றுகிறார் என்று கூறப்பட்டதால்... அவரை காப்பாற்றும் விதமாகவே இந்த எவிக்ஷன் நடந்துள்ளது போல் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக ஆர்.ஜே.ஆனந்தி வெளியேறியுள்ளார். இதன் மூலம் அடுத்த வாரமும் தர்ஷிகா - விஜே விஷாலின் காதல் லீலைகள் தொடர உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கிய 24 மணிநேரத்தில் சாச்சனா வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வாரம் கழித்து வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.