பிக் பாஸ் சீசன் 9.. கோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி! எவ்வளவு தெரியுமா?
Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் சீசன் 9-ஐ தொகுத்து வழங்க உள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரியுமா?

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் சீசன் 9-ஐ தொகுத்து வழங்க உள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 9:
விஜய் தொலைக்காட்சியில் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 9 ஆவது சீசன் நாளை அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இச்சூழலில் தான் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் பெறுவார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு?
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 8-ல் நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்பளமாக ரூபாய் 60 கோடி வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள பிக் பாஸ் சீசன் 9-ல் விஜய் சேதுபதி சம்பளமாக ரூபாய் 75 கேடி வாங்குவார் என்று தெரிகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி படத்தில் கூட இதை விட கம்மியான சம்பளம் தான் பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதாவது 25 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு ஒரு படத்தில் நடிப்பதற்கு வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதை விட பல மடங்கு சம்பளம் பெற இருக்கிறார். அதே நேரம் போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரின் முக்கியமான வேலை. கடந்த முறை விஜய் சேதுபதி முதல் தடவையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அப்போது இவர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் இந்த முறை அதையெல்லாம் மாற்றி ரசிகர்களுக்கு பிடிக்கும் படி நிகழ்ச்சியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மொழியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானை விட இவருக்கு கிடைக்கும் சம்பளம் குறைவுதான் . அதாவது கடந்த முறை சல்மான் கான் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















