மேலும் அறிய

Bigg Boss Season 7: ரசிகர்களே.. இதுதான் இன்ப செய்தி.. முடிந்தது பிக் பாஸ் 7 ப்ரோமோ ஷூட்...! விரைவில் ரிலீஸ்..! 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் தேதி குறித்தும் போட்டியாளர்கள் விவரம்  குறித்த அறிவிப்பும் வெளியாகும். 

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிரேஸ் அதிகம். கடந்த ஆறு சீசன்களாக அமோக வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பிக் பாஸ்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். அவர்களின் மார்க்கெட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு எகிறி விடுகிறது என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் விருப்பப்படுகிறார்கள். கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும்  ஆறாவது சீசன் சண்டை சச்சரவிலும் சரி டைட்டில் வின்னர் அறிவிப்பிலும் சரி ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் பலரால் அசீம் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   

Bigg Boss Season 7: ரசிகர்களே.. இதுதான் இன்ப செய்தி.. முடிந்தது பிக் பாஸ் 7 ப்ரோமோ ஷூட்...! விரைவில் ரிலீஸ்..! 

உலக நாயகன் என தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனை முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் முன்னிலையில் நிறுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் இத்தனை வரவேற்பு கிடைப்பதற்கு அவர் தான் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. கடந்த ஆறு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே இந்த சீசனையும் அவரே தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. மேலும் இந்த சீசன் போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்ற தகவல் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான லிஸ்ட் இதுவரையில் வெளியாக வில்லை.  

ப்ரமோ ஷூட்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ ஷூட் நேற்று நடைபெற்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டது என்றால் நிகழ்ச்சியும் விரைவில் துவங்கிவிடும் என பலரும் மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் விரைவில் துவங்க உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரைவில் தொடங்கி முடிக்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ப்ரோமோ ஷூட் முடிந்து விட்டது என்றாலும் விரைவில் நிகழ்ச்சி துவங்குமா? என்பதில் சந்தேகம் தான் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் இந்த ப்ரோமோ ஷூட் முன்னரே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் தீம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த விவரமும் ஒரே சஸ்பென்ஸாகவே உள்ளது. கமல்ஹாசன், தி.மு.க கட்சியுடன் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதனால் அரசியல் சார்ந்த தீம் கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் துவக்கம் குறித்தும் அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget