priya bavani sankar | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் ப்ரியா பவானி சங்கர்?! - ரசிகர்கள் உற்சாகம்!
போட்டியின் சர்ப்ரைஸ் அம்சமாக நடிகை ப்ரியா பவானிசங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரமும் 17 பேரில் இருந்து ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே போட்டியின் சர்ப்ரைஸ் அம்சமாக நடிகை ப்ரியா பவானிசங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போட்டியாளராக இல்லாமல் அவரது அடுத்த படமான ஓ மணப் பெண்ணே வுக்கான ப்ரோமோவாக அவர் நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ஓ மணப் பெண்ணே திரைப்படம் வருகின்ற அக்டோபர் 22ல் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில்தான் அதற்கான ப்ரோமோவாக ப்ரியா பவானி சங்கர் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற கதை சொல்லட்டுமா சுற்றில் , போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் கடந்து வந்த பாதை குறித்து சக போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அப்போது நதியா சாங் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பின்பொழுது ,”சிறு வயது முதல் தனது அம்மா மீது கொண்ட வெறுப்பு, பட்ட துயரங்கள் அனைத்தையும் பேசினார். அதில் என் இயற்பெயர் அரு ஜெயலட்சுமி என்றும், தான் 14 வயதில் இருந்தே வேலை செய்துவந்தேன். என்னுடைய அம்மா ரொம்ப ஸட்ரிக்ட் எனவும், எப்ப பார்த்தாலும் என்னை அடிக்கத்தான் செய்வார். மேலும் அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது என்றால் போலீஸ்காரங்க கிட்ட என்னை அடி வாங்க வச்சதுதான்” என வேதனையுடன் தெரிவித்தார். மேலும் 14 வயது முதல் நான் வேலைக்கு சென்றுவிட்டேன் எனவும் ஹோட்டலில் தான் வேலைப்பார்க்கும் போது தான் என்னை காதலித்ததோடு, என் அம்மாவை எதிர்த்து என்னை திருமணம் செய்தார் என்னுடைய கணவர். மேலும் என் அம்மா இதுவரை என்னை கொடுமைப்படுத்தினாங்க.. ஆனால் எனக்கு எந்த கோபமும் இல்லை. அப்படி என்னை ஒதுக்கியதால்தான், யார் என்றே தெரியாத நான் என்னுடைய வாழ்க்கையில் இப்போது ஜெயித்துக்கொண்டு இருக்கிறேன் எனவும், என்னோட ஒவ்வொரு வெற்றிக்கும் எனது தாய் அளித்த கொடுமைகள்தான் காரணம் என கூறினார்.
மேலும் என் வாழ்க்கையில் மனிதர்கள் கொடுக்காத பெருமையை ஒரு ஆப் கொடுத்தது என்று கூறியிருந்தார். இவர் கூறிய கதையில் ஹவுஸ் மேட் பலருக்கும் விருப்பம் இல்லாததால் டிஸ்லைக் கொடுத்தனர் . இந்நிலையில் மலேசிய தமிழர் ஒருவர் நாடியா சாங் கூறியது அனைத்தும் பொய் எனவும், பெற்ற தாய் தவறே செய்திருந்தாலும் ஒரு மகள் எப்படி தாயை வேறு நாட்டிற்கு சென்று விட்டுக்கொடுத்து பேசுவார் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ,வீடியோவின் தொடக்கத்தில், “எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது. பைத்தியம் மாதிரி தெரியுதா? என்ன சொன்னாலும் இவனுங்க நம்புவாங்கனு நினைப்பா. மலேசியாவுல இருந்து ஒரு பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் போயிருக்கீங்க.. எது பேச வேண்டாம் , நல்லதோ கெட்டதோ நம்மலால முடிஞ்ச ஆதரவு கொடுக்கலாம் என நினைத்தால், ஓவராக பேசுறீங்க. டிவிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா. இதில் மலேசிய போலீசை வேறு அசிங்கப்படுத்தி இருக்கீங்க.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எந்த நாட்டிலும் வேலையே கொடுக்க மாட்டார்கள் நீங்க எப்படி 15 வயதிலேயே வேலைக்கு போனீர்கள். அதுவும் ஓட்டலில் ஹவுஸ்கீப்பிங் வேலை. அதை விட மலேசிய போலீசிடம் உங்க அம்மா அடி வாங்க விட்டு வேடிக்கை பார்த்ததாக கூறி உள்ளீர்கள். அதுவும் 12 – 13 வயதில். சேட்டை செய்து தெருவில் சுற்றும் ஆம்பள பசங்க எங்களையே சாப்பாடு போட்டு கவனித்து, வீட்டில் வந்து விட்டு போன மலேசியபோலீஸ் பெண் பிள்ளைகளை எப்படி அடித்திருப்பார்கள். அப்படியானால் ரொம்ப பெரிய கேசில் மாட்டிக்கிட்டீங்களோ. இந்திய போட்டியாளர்கள் யாரும் தங்களின் பெற்றோர்களை விட்டுக் கொடுப்பதில்லை. மலேசியா போட்டியாளர்களுக்கு மட்டும் ஒன்று அப்பா சரியில்லாமல் இருக்கிறார்கள் ( முன்னதாக முகேன் தனது அப்பா சரியில்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது குறிப்பிடத்தக்கது) அல்லது அம்மா சரியில்லாமல் இருக்கிறார். பெற்றோர்கள் இல்லை உங்களை பெற்ற நேரம்தான் சரியில்லை. பெற்றோர்கள் எப்படி இருந்தாலும் இப்படியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லி மானத்தை வாங்குவீர்கள் என கண்டன குரல் எழுப்பியுள்ளார்.