மேலும் அறிய

Biggboss Tamil 5 | இன்னொரு பிக்பாஸ் பரணியாக மாறுகிறாரா அக்‌ஷரா? பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா?

இன்னொரு பிக்பாஸ் பரணியா, அக்‌ஷரா ரெட்டி? பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா? என ரசிகர்களுக்கு கேள்வியெழுந்துள்ளது.

விஜய் டிவி பிக்பாஸ் பயங்கர பரபரப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. எபிசோட் 19 தொடக்கத்திலேயே அக்‌ஷரா அழுத அழுகையை பார்த்து, சீசன் 1 பிக்பாஸ் பரணியைப்போல் எகிறிகுதிப்பாரோ என பயந்துபோய் அக்‌ஷராவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தான் பிக்பாஸ்.. (அந்த பயம் இருக்கட்டும்). “என்னால இங்க என்னோட குணத்தோட இருக்க முடியல. ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் எல்லாம் எல்லாத்தையும் தட்டிக்கேட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ வேண்டியதுதானே. மதுவுக்கு நான் உதவி பண்ணனும்னு நினைச்சதுதான் பெரிய தப்பு. அவளாலதான் இப்போ இந்த நிலைமை எனக்கு. நல்லது பண்ணாலும் தப்பாகுது. எனக்கு எதுவும் பிடிக்கல” என்றார். 

எல்லாமே விளையாட்டுதானே. நீங்க நல்லா விளையாடிக்கிட்டு இருக்கீங்க என்றார் பிக்பாஸ். (அவங்க விளையாடுறாங்களோ இல்லையோ நீங்க நல்லா விளையாடுறீங்க பிக்பாஸு) நான் வீட்டுக்குப் போகணும் என்ன விட்டுடுங்க. என்ன விட்டுடுங்க பிக்பாஸ் நான் வீட்டுக்குப் போகணும். எல்லாரும்போல நான் கஷ்டப்படலன்னு சொல்லிட்டு யாருக்கும் என்னை இஷ்டமில்ல. என்னால என்னோட கடந்த காலத்தை மாத்தமுடியாது.

இவ்வளவு கலவரம் நடந்துகொண்டிருந்தாலும், ப்ரியங்கா நிரூப் அபிஷேக் காம்போ, டாப் 5-ல நம்ம இருக்கணும். இந்த டாஸ்க் முடியும்போது எல்லாரும் நம்ம கூட வந்து ஜாய்ண்ட் அடிக்கணும் என பேசிக்கொண்டிருந்தது. (எந்த உலகத்துல இருக்காங்கன்னு தெரியலடா எப்பா)

காவாலித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கு ப்ரியங்கா க்ரூப்பு என்று பேசிக்கொண்டிருந்தார் இமான். எதுக்கு இசையைக் காப்பாத்துனீங்க, ஏன் எங்க மேல அந்த ஃபீலிங் இல்லையா என கேட்டுக்கொண்டிருந்தார் பாவனி. நீங்கதானே தாமரையையும், இசையையும் காப்பாத்துவேன்னு சொன்னீங்க, அதான் நாங்க ஸ்ட்ரெய்ட்டா இசையைக் காப்பாத்துனோம் என நோஸ் கட் செய்தார் சிபி. அடுத்த சீனில், எல்லாரும் காயினை கொண்டு வந்து ப்ளாஸ்மா முன்பு காண்பிக்கச்சொன்னபோது, நிரூ, தாமரை, வருண், இசைவாணி, பாவனியிடம்தான் காயின்கள் இருந்தது உறுதியானது. (பாவனி, என்ன நடிப்பும்மா உனக்கு)

நீர் - பாத்ரூம் ஏரியா, நெருப்பு - கிச்சன் ஏரியா, நிலம் - பெட்ரூம், காற்று - கார்டன் ஏரியா, ஆகாயம் - லிவிங், டைனிங் ஏரியா ஆளுமை கிடைக்கும் என்றார் பிக்பாஸ், தன் ஓலையில். இனிமேவும் திருடலாமாம் (ஷப்பா)

இத்தனை நாளாக யார் யாரையோ காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டிருந்த அபிஷேக், இனி மதுமிதாவைக் காப்பாற்றுவேன் என உறுதி கொடுத்தார். (கொடுமைடா சாமி). வாடா தடிமாடு வந்து பெட்டியைத் தூக்கிக்கொடு என நிரூப்பிடம் சொல்லிக்கொண்டிருந்தார் மது. அண்ணாச்சி தாமரையிடம் இருந்து பிடுங்கி கார்டன் ஏரியாவுக்கு ஆளுமையானார். அபிஷேக், இசையிடம் இருந்து பேசிப்பிடுங்கி கிச்சன் என்னோடது என்றார். இசை மறுபடியும் அபிஷேக்கிடமிருந்து பிடுங்கி பெட்டிக்குள் வைத்துக்கொண்டார். டாப் 5 போறதுக்கு என்ன பண்ணனும்? என நிரூப்பிடம் கேட்டார் அபிஷேக் (யப்ப்ப்பாஆஆஆஆ)

அபிஷேக் தன்னையே ஆகாசம் என்றார். நிரூப் நெருப்பாம். இமான், தன்னையே நெருப்பு என்றார். அபிஷேக் கொளுத்திப் போடுகிற நெருப்பாம். பாவனி தன்னைத்தானே நீர் என்றார். காற்று அக்‌ஷராவாம். நாசம் செய்யுமாம். ப்ரியங்கா தன்னையே நீர் என்றார். காற்று ராஜுவாம். கண்ணுக்கு தெரியலயாம்.ஐய்க்கி தன்னை நிலம் என்றார். இசையை நெருப்போட ஒப்பிடறேன். சிபி தன்னை நெருப்பென்றார். ராஜு நிலம் என்றார். ஏனெனில் சொரணையே இல்லாமல் இருக்கிறாராம். நான் சூறாவளி காற்று என்றார் ராஜு. எல்லாரும் என்னை அளவா யூஸ் பண்ணுங்க என்றார். ப்ரியங்கா நெருப்பு. நல்லாத்தான் இருக்கும். ஆனா பத்த வெச்சிரும் என்றார்.

எல்லாரையும் நம்ப வெச்சு கழுத்தறுக்குற என சொல்லாமல் அதையே கொஞ்சம் பாலிஷாக சொல்லிக்கொண்டிருந்தார் இமான், அபிஷேக்கிடம்.. நாளைக்கு தெரியும் பஞ்சதந்திரம் என்ன ஆச்சுன்னு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget