Biggboss Tamil 5 | கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு எண்ட்ரி கொடுக்கணும் - பிக்பாஸிடம் கேட்ட நிரூப்..
என் அம்மா ஒரு மதம், என் அப்பா ஒரு மதம்.. அதனால இன்னும் அதிரிபுதிரியாகிடுச்சு.
ப்ரியங்காவும், நிரூப்பும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்கள். “சனிக்கிழமை கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு எண்ட்ரி கொடுக்கணும்”பா என பிக்பாஸுக்கே கோரிக்கை வைத்தார் நிரூப். அடுத்து ராஜுமோகன் தன் கதையை சொல்லும் டாஸ்க் வந்தது. “சின்ன வயசில் இருந்ததில் இருந்தே சினிமா எனக்குப் பிடிக்கும்” எனப்பேசிய ராஜு, எம்.ஆர் ராதா குரலிலெல்லாம் பேசி அசத்தினார்.
அரைகுறையா என்னோட முதல் குறும்படத்தை இயக்கியபோதே தன் அப்பா இறந்த கதையை கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ராஜு. முதல் படத்தைப் பார்க்க வந்த பாக்யராஜ், தன்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்ட கதையைச் சொன்னார். கதை சொல்லியாகவே அசர வைத்தார் ராஜு மோகன். இன்னைக்கு என் மேல வெளிச்சம் பட்டுக்கிட்டு இருக்கு. என் மனைவிக்குதான் எல்லா பெருமையும்”ன்னு சொன்னார் ராஜு. எல்லாரும் அசந்துபோய் வாயைத் திறந்து வெச்சு பாத்தாங்க.
ஸ்மோக்கிங் ரூம் மாதிரி இருக்கும் அந்த அறையில் நிரூப்பும், ப்ரியங்காவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிரூப், இமாம் அண்ணாச்சியைப் பற்றி நல்லதாகச் சொல்கிறார்கள். கண்டெண்ட்டுக்காக எதையும் செய்யாத. நார்மலா இரு என ப்ரியாங்காவுக்கு அட்வைஸ் செய்கிறார் நிரூப்.
அபிஷேக், அக்ஷரா, பாவனி தலைமையில் ஒரு குழு. அவர்கள் யார் ஜொலித்தார்கள் என்பதையும், யார் கூட்டத்தில் காணாமல் போனார்கள் என்பதையும் எல்லோரிடமும் கலந்து பேசி முடிவுதர வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
இமானின் கருத்து : ஜொலித்தவர் - ப்ரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியங்கா கருத்து : ஜொலித்தவர் - இமான் அண்ணாச்சி என்றார். பலரும் இதேபோல தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அபிஷேக், அக்ஷரா, பாவனி எல்லோரும் கூடி முடிவெடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் காஸ்ட்யூம் வந்தது. வேகமாக ஓடிப்போய் ரசகுல்லாவை வாயில் அமுக்கினார் ப்ரியங்கா. Fun Fun. இசையின் கானாவும், சின்னப்பொண்ணுவின் கிராமியமும், அபிஷேக்கின் மிருதங்கமும் களைகட்டியது. நிரூப்புக்கு இருக்கும் முடி போதாதென சிவன் ஜடாமுடியையும் கொடுத்து விட்டிருந்தார்கள்.
View this post on Instagram