Bigg Boss 5 Tamil: ‛மூட்டையை தூக்குனா வேட்டை....’ கொட்டும் மழையில் கொலைவெறி டாஸ்க்! வின்னர் சிபியா... அமீரா...?
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க் விளையாடி வருகின்றனர்.
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியில்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நிரூப்பை தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில், ‘Ticket to Finale’ டாஸ்க்கின் கடைசி போட்டி நடைபெற்றிருக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் கடைசி போட்டியில் சிபியும், அமீரும் போட்டியிடுகின்றனர். கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் மணல் மூட்டையை தூக்கும் வகையில் கயிற்றை இழுத்து பிடிக்க வேண்டும். டாஸ்க் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு காலால் நிற்க வேண்டும் என பிக் பாஸ் கட்டளையிட, போட்டியாளர்கள் திணறுகின்றனர். டாஸ்க்கை வென்று இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாய் முன்னேறப்போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும்.
ப்ரொமோ:1
#Day89 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/hNxn2Mbms8
— Vijay Television (@vijaytelevision) December 31, 2021
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்