Bigg Boss 5 Tamil Promo: டான்ஸ் டாஸ்க்கை ஆரம்பித்த பிக்பாஸ்... இன்னிக்கு கொஞ்சம் ஜாலியா இருக்கும்போல!
சினிமா சினிமா' என்ற பெயரில் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5-ன் இன்றைய தினத்தின் 2-வது புரோமோ வெளியாகியிருக்கிறது. 'சினிமா சினிமா' என்ற பெயரில் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்படும். அவர்களது கதாபாத்திரங்களுக்கான பாடல்கள் ஒலிக்கப்படும்போதெல்லாம் உடனே மேடைக்கு வந்து அந்த பாடல் முடியும்வரை நடனமாட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.. படையப்பா, முந்தி விநாயகரே உட்பட பல்வேறு பாடல்கள் ப்ளே செய்யப்படுகிறது. இசைவாணி, சந்திரமுகி கங்காவாக இருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் நேசமணி கேரக்டரில் பிரியங்கா வருகிறார்..
View this post on Instagram
முன்னதாக முதல் புரோமோ வெளியாகியிருந்தது. அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைவரும் தயாராக வேண்டும் என்கிறார் நிலத்தின் தலைவர் நிரூப். அப்போதுதான் அனைவரும் மேக்கப், ஹேர் டூ என அவசர அவசரமாக தயாராகிறார்கள். நேரத்திற்குள் வரவில்லையெனில் பாவக்காய், பச்சை மிளகாய் சாப்பிடனும் என்றும் சொல்கிறார். பச்ச மிளகாய் லாம் சாப்பிட்டால் எரியும் என பிரியங்கா சொல்கிறார். பாவக்காய், பச்சை மிளகாய்னு இன்னும் என்னென்ன வெச்சிருக்காங்களோ?
View this post on Instagram