![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss Ultimate: மறுபடி அதிரடி.! பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியன்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் உள்ளே வந்துள்ளார்.
![Bigg Boss Ultimate: மறுபடி அதிரடி.! பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியன்! உற்சாகத்தில் ரசிகர்கள்!! Bigg Boss Ultimate to welcome Ramya Pandian as a wild card contestant Bigg Boss Ultimate: மறுபடி அதிரடி.! பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியன்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/a6f97a5d686955beb1187d90af84962c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. கமலுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது எனலாம். தன்னுடைய இரண்டாவது எபிசோடிலே போட்டியாளர்களை கண்டித்து சிம்பு தனது பாணியில் இந்த ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலே ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாக்குவது எலிமினேஷன் எனப்படும் வெளியேற்றப்படும் சுற்றுதான். இந்த வாரமும் வழக்கம்போல எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வார எலிமினேஷன் சுற்றில் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் உள்ளே வந்துள்ளார்.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 9, 2022
▶️11:30 pm Onwards.. #Day38 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/HHrTlassnT
கண்ணே கண்ணே பாடல் ஒலிக்க உள்ளே வரும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் சக போட்டியாளர்கள் வாசலில் காத்திருக்கின்றனர். புன்சிரிப்புடன் உள்ளே வருகிறார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் ரம்யாவை சக போட்டியாளர்கள் கட்டியணைத்து வரவேற்றுள்ளனர். ரம்யாவின் வருகையை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டின் தொகுப்பாளர் பணியில் இருந்து கமல்ஹாசன் விலகியது, பிக்பாஸ் அல்டிமேட்டை எப்போதும் பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்த வனிதா பாதியிலே வெளியேறியது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா வைல்ட் கார்ட் ரவுண்ட் ஆகியவற்றிற்கு பின்னும் வராதது போன்ற நிகழ்வுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியே டல்லடிக்கத் தொடங்கியது. இத்தனைக்கும் சேர்த்து எனர்ஜி டானிக் அளிக்கும் விதமாகவே மாநாடு படம் மூலமாக கம்பேக் கொடுத்த சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார்.
தனது நிகழ்ச்சித் தொகுப்பு மூலமாகவும், இந்த வார எலிமினேஷன் மூலலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் விறுவிறுப்பாக சிம்பு நகர்த்தி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)