BB Ultimate: 'நம்பர் 4 - சுரேஷ் சக்கரவர்த்தின்னு அறிவிச்சிடலாமா?’ - வெளியானது பிக் பாஸ் அல்டிமேட் ப்ரொமோ
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது.
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் 24-7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் இறுதிபோட்டியன்று வெளியிட்டார்.
தொலைச்ச இடத்துல தான தேட முடியும்..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 17, 2022
தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..
This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! 😎 #BBUltimate pic.twitter.com/FIs7O3GUky
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
ஏற்கனவே, இந்த BiggBossUltimate-க்குள் முதல் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் 1 சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த பாடலாசிரியர் சினேகன் வர இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அதே சீசனில் பங்குபெற்ற ஜூலியும் இரண்டாவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்ததாக, வணிதா வருவதாக அறிவிப்பு வெளியானது.
#YaaruAnthaHouseMate..? #BBUltimate (Contestant 4) https://t.co/S0yXh9gRKu
— Vijay Television (@vijaytelevision) January 27, 2022
இதையடுத்து, நான்காவது போட்டியாளராக பங்கேற்கும் அந்த நபர் யார் என்பது குறித்த குறிப்புடன் விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டது. அதில், போட்டியாளர்களை கண்டுபிடிப்பதற்கான க்ளூ வழங்கப்பட்டது. கரண்டி, துண்டு, தீப்பட்டி போன்ற க்ளூக்களை வைத்து பார்க்கும்போது இது சுரேஷ் சக்கரவர்த்திதான் என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இதற்கான விடை இன்று 6 மணிக்கு ப்ரோமோவாக வெளியாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்