மேலும் அறிய
Advertisement
Bigg Boss Poornima: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு இவ்வளவு சம்பளமா..? - வாய்பிளந்த ரசிகர்கள்
Bigg Boss Poornima: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு கிடைத்துள்ள மொத்த தொகை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Poornima: பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா, ஸ்மார்ட்டாக விளையாடி ரூ. 30 லட்சம் வரையிலான தொகையை பெற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில், டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. ரூ.1 லட்சமாக இருந்த பணப்பெட்டி ரூ.16 லட்சம் வரை உயர்ந்தது. ஒவ்வொரு நாளாக பணப்பெட்டியின் மதிப்பு உயர்ந்ததால், அதை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறினார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் மணி, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமாவின் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு கிடைத்துள்ள மொத்த தொகை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் பூர்ணிமாவுக்கு சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பூர்ணிமா பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 94 நாட்கள் இருந்ததால், பணப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.16 லட்சத்தை சேர்த்து மொத்தமாக ரூ.30 லட்சத்தை அவர் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் ஸ்மார்ட்டாக விளையாடிய பூர்ணிமா குறிப்பிட்ட தொகையை சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தனது நண்பர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பூர்ணிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை கொண்டாடினார்.
GIRL is enjoying her life right now💥💥
— sheyla (@rukmini_diva) January 5, 2024
noone can break your confidence right now...
ENJOY THIS MOMENT #POORNIMA
you are the STAR of this day💗💗😍😍💥💥💗⭐️⭐️#BiggBossTamil7 pic.twitter.com/P3rhtms8YL
தற்போது பூர்ணிமா வெளியேறியதால் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, அர்ச்சனா, விஷ்ணு, விஜய் வர்மா, மணி, மாயா உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களில் இன்றைய எலிமினேஷனில் மணி மற்றும் விஜய் வர்மா வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அர்ச்சனா அல்லது மாயா டைட்டில் வின்னராகலாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: காசு பணம் துட்டு மணி மணி! ரூ.16 லட்சத்துடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா - வியந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion