மேலும் அறிய
Bigg Boss 7 Tamil Ananya: மிட் வீக் எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அனன்யா! மறுபடியுமா?
Bigg Boss 7 Tamil Ananya: இன்றைய மிட் வீக் எவிக்ஷனில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அனன்யா வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

மிட் வீக் எவிக்ஷன் அனன்யா
Bigg Boss 7 Tamil Ananya: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 73வது நாளை கடந்துள்ளது. ஓவ்வொரு வாரமும் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சென்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். முதல் வாரத்தில் அனன்யா வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் வெளியேறினார். அடுத்ததாக விஜய் வர்மா என ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ” அதில் பிக்பாஸ் இல்லத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அது மிட் வீக் எவிக்ஷன். நாமினேஷன் லிஸ்டில் உள்ள தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் உள்ளிட்டோரில் இறுதியில் யாருடைய புகைப்படம் நிறைவாகவில்லையோ அந்த நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்க்கையில் இன்றைய மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனன்யா முதல் ஆளாக வெளியேறி இருந்தார். மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனன்யா தற்போது வெளியேறுகிறார்.
View this post on Instagram
மேலும் படிக்க: Kottukkaali: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம்: ‘கொட்டுக்காளி’யால் செம குஷியில் சிவகார்த்திகேயன்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















