மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil Pradeep: மகளை காப்பாற்றும்படி பிரதீப்பிடம் கேட்ட ஐஷூ தந்தை - வாட்சப் உரையாடலால் அதிர்ச்சி!
Bigg Boss 7 Tamil Pradeep: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் தனது மகளுக்கு உதவ வேண்டும் என பிரதீப்பிடம் ஐஷூவின் தந்தை பேசிய வாட்சப் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது.
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் தனது மகளுக்கு உதவ வேண்டும் என பிரதீப்பிடம் ஐஷூவின் தந்தை பேசிய வாட்சப் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 56வது நாளை கடந்த நிலையில், கடந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா மீண்டும் ரீ - என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சில சம்பவங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Conversation between Aish Dad & Pradeep on Nov 7.☹️🤐#BiggBoss7Tamil pic.twitter.com/JglVbww6FP
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 27, 2023
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஐஷூ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். நிக்சனுடன் ஐஷூ நெருக்கமாக இருந்ததால், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, எதிர்பாராத அளவுக்கு பெரிதாக எதுவும் செய்யாததால் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷூ தன் மீதான விமர்சங்களுக்கு டிவிட்டர் பதிவு மூலம் பதிலளித்து வந்தார்.
அதற்கிடையே, ஐஷூவின் தந்தை பிரதீப்புடன் பேசிய ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மாயா மற்றும் பூர்ணிமாவால் தனது மகள் ஐஷூ இன்ஃபுளூயன்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தனது மகள் ரெட் கார்டு கொடுத்ததால் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஐஷூவின் தந்தை, ஐஷூ மீதான எதிர்மறை விமர்சனங்களை தாங்க முடியவில்லை என்றும், அதனால் போட்டியில் இருந்து அவரை வெளியேற்ற உதவி செய்யுமாறு பிரதீப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதேநேரம், தான் யாரையும் தவறாக நினைக்கவில்லை என்ற பிரதீப் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகிறேன் என்றதுடன், அவர் ஒரு தைரியமான போட்டியாளர் என கூறியுள்ளார்.
பிரதீப் ஐஷூ தந்தையுடனான வாட்சப் உரையாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே அதை டெலிட் செய்துள்ளார். எதற்காக இந்த உரையாடலை வெளியிட்டு டெலிட் செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுபோன்று மேலும் சில அதிர்ச்சிகளை பிரதீப் தருவார் என அவரது ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஷு ஒரு பக்கத்துக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், பிரதீப்க்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பிக்பாஸ் போட்டி தன்னை தவறாக சித்தரித்து விட்டதாகவும், அதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்திருப்பதாகவும் ஐஸ்வர்யா கூறியிருந்தார்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: விஜய், அனன்யாவால் கதறி அழும் பூர்ணிமா... ஆறுதல் தெரிவித்த விசித்ரா..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion