மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: விஜய், அனன்யாவால் கதறி அழும் பூர்ணிமா... ஆறுதல் தெரிவித்த விசித்ரா..!
Bigg Boss 7 Tamil: விஜய், அனன்யாவால் கதறி அழும் பூர்ணிமாவின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Bigg Boss 7 Tamil: விஜய், அனன்யாவால் பூர்ணிமா கதறி அழும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 56வது நாளை கடந்த நிலையில், கடந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா உள்ளிட்டோர் வெளியேற்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா மீண்டும் ரீ - என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனால் போட்யில் மேலும் சில சம்பவங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ” விஜய், அனன்யா எல்லாம் அப்படி சொல்வது எனக்கு கடுப்பாக உள்ளது. என்னை மட்டுமே அட்டாக் செய்கிறார்கள். நாமினேட் பண்ணும்போது எனக்கு மட்டும் பேசறாங்க. இதுக்கு மேலயும் இதை தான் பண்ண போறாங்க...” என பூர்ணிமா அழுகிறார். அவரை சமாதானப்படுத்தும் மாயா, ”இதை மாற்றுவதற்கான சான்ஸ் நிறைய இருக்கு. இந்த வாரம் நீங்கள் டல் ஆக கூடாது” என மாயா கூறுகிறார்.
மற்றொரு புரோமோவில், பூர்ணிமாவை நேரடியாக மாயா நாமினேட் செய்கிறார். ஒன்று நான் இருக்க வேண்டும், இல்லை என்றால் பூர்ணிமா இருக்க வேண்டும் என மாயா கூறும் போது பூர்ணிமா கண்கலங்குகிறார். பிக்பாஸ் தொடங்கிய சில வாரங்களிலேயே மாயாவும், பூர்ணிமாவும் ஒரே கூட்டணியாக இருந்து வருகின்றனர். பிரதீப் வெளியேற்றப்பட்ட போது மாயாவும், பூர்ணிமாவும் ஒன்றிணைந்தே ரெட் கார்டு கொடுத்தனர். அதேபோல் அர்ச்சனாவுக்கு எதிராகவும் மாயா, பூர்ணிமா சண்டையிட்டனர். ஒருவரும் அதிகமான நட்புடன் இருப்பதாக பிக்பாஸ் போட்டியாளர்களே விமர்சித்து வந்தனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த மாயாவும் பூர்ணிமாவும், வரும் காலங்களில் எதிரிகளாக மாறலாம் என கூறப்படுகிறது.
#PoornimaRavi leaning on #Vichitra shoulder and crying, #Maya is trying to cheer up her.#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #BiggBoss7tamil #BiggBoss7pic.twitter.com/6LK56eY1cy
— Vakugu (@vakugu) November 27, 2023
இதற்கிடையே கதறி அழும் பூர்ணிமாவை விசித்ரா தோளில் சாய்த்து வைத்து ஆறுதல் படுத்துகிறார். மாயாவும் விசித்ராவுடன் இணைந்து பூர்ணிமாவை சமாதானப்படுத்துகிறார்.
தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், ரவீனா தாஹா, சரவண விக்ரம், ஜோவிகா விஜயகுமார், நிக்ஸன், விஷ்ணு விஜய் உள்ளிட்ட பலரும் உள்ளே உள்ளனர். மேலும் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion