Bigg Boss Archana: பிக்பாஸ் அர்ச்சனாவின் முதல் திரைப்படம்.. வெளியான காட்சி.. வாழ்த்தி தள்ளும் ரசிகர்கள்!
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வோட்டிங்கில் லீடிங்கில் இருந்து வரும் அர்ச்சனா, வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து ஆதரவைக் குவித்து வருவது சக போட்டியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகி வரவேற்பினைப் பெற்று வருகிறது.
அர்ச்சனாவின் அதகளமான ஆட்டம்
இந்நிலையில் இந்த ட்ரெய்லரில் பிக்பாஸ் அர்ச்சனா இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே அர்ச்சனா, ராஜா ராணி 2, தேன்மொழி பிஏ ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து இந்த பிக்பாஸ் 7ஆவது சீசனில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக யாரும் எதிர்பாராத நேரத்தில் நுழைந்த அர்ச்சனா முதலில் கண்ணீரும் கம்பலையுமாக வலம் வந்தார். ஆனால் அதன் பின் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து தன்னை கார்னர் செய்தவர்களுக்கு பதிலடி தந்து பிக்பாஸ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
மாயா - பூர்ணிமா -ஜோவிகா - ஐஸூ ஆகியோரின் குழு அர்ச்சனாவை கிண்டல், கேலி செய்ய, விசித்ரா தந்த ஆதரவும் அதன் பின் இருவரும் சேர்ந்து இருவரும் சாதுர்யமாக விளையாடி பதிலடி தந்ததும் ரசிகர்களின் பெருவாரியான வாக்குகளை இவர்களுக்கு பெற்றுத் தந்தது.
வெள்ளித்திரை என்ட்ரி
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வோட்டிங்கில் லீடிங்கில் இருந்து வரும் அர்ச்சனா, வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து ஆதரவைக் குவித்து வருவது சக போட்டியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் சென்ற வாரம் அர்ச்சனாவின் போக்கு கமல்ஹாசன் உள்பட சமூக வலைதளங்களிலும் பலராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. கேலி, கிண்டல் தொடங்கி பிறரை தாக்கி அர்ச்சனா விளையாடத் தொடங்கியது விமர்சனங்களைப் பெற்றது. இருந்த போதிலும், இந்த வாரம் தன் இமேஜை மாற்றி டாஸ்க்குகளில் அர்ச்சனா அப்ளாஸ் அள்ளினார்.
குறிப்பாக திமிரு ஈஸ்வரி கெட் அப்பில் அர்ச்சனா கலக்கிய நிலையில், இந்த வாரம் சிறந்த பர்ஃபாமன்ஸ் வழங்கியதாக அர்ச்சனாவை ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்தனர். மேலும், இந்த வாரம் சமூக வலைதளங்களிலும் அர்ச்சனாவின் ஈஸ்வரி கெட் அப் லைக்ஸ் அள்ளியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிமான்டி காலனி ட்ரெய்லரில் அர்ச்சனா இடம்பெற்று அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வாழ்த்தும் ரசிகர்கள்
டிமாண்டி காலனி படத்தின் மூலம் அர்ச்சனா தன் வெள்ளித்திரை வெள்ளித்திரை எண்ட்ரியை கொடுத்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஸ்க்ரீன்ஷாட்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் முன்னோட்டம் பிக்பாஸ் வீட்டில் தொடங்கியுள்ள நிலையில், தொடக்கத்திலேயே அர்ச்சனா, விஜய் வர்மா இருவரும் பிற ஹவுஸ்மேட்ஸால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தன் பர்ஃபாமன்ஸ் மூலம் பெற்ற பாயிண்ட்ஸை அர்ச்சனா பூர்ணிமாவுக்கு தந்துள்ளார். மேலும் இந்த வார வீக் எண்ட் எபிசோடில் அர்ச்சனா முதல் ஆளாக சேவ் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.