Bigg Boss 7 Tamil: தலைமைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? பிரதமர் மோடியை சீண்டுகிறாரா கமல்? பிக்பாஸில் சரவெடி அரசியல் பேச்சு!
எந்த ஒரு பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்யும் தலைமைதான் நல்ல தலைமை என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் 7 தமிழ்
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். அதேசமயம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் கேப்டனமாக நிக்சன் இருந்த நிலையில், அடுத்த வாரம் கேப்டனாக விஷ்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், நேற்றைய சனிக்கிழமை எபிசோட்டில் பூர்ணிமா, கூல் சுரேஷ் சேவ் செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் மேடையில் அனல் பறந்த அரசியல் பேச்சு
இதனை அடுத்து, நேற்யை எபிசோட்டில் நிக்சனின் கேப்டன்சி பற்றி சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்டார். இதற்கு சக போட்டியாளர்களும் கலவையான விமர்சனைகளை முன்வைத்தனர். ஒருதலைப்பட்சமாக இருந்ததாகவும், எந்த ஒரு பிரச்னைக்கும் சிரியான தீர்வை எடுக்கவில்லை என்றும் சக போட்டியாளர்கள் கமலிடம் குற்றம் சாட்டினர். இதற்கு பதலளித்து பேசிய கமல், ”நாமினேஷனில் இருந்து ஒரு வாரம் தள்ளி இருப்பது மட்டும் கேப்டன்சி அல்ல. தலைமை ஒரு பொறுப்பு. தலைமை பொறுப்பை ஒரு வாரம் சரியாக செய்து கொண்டு இருந்தவர்கள், அடுத்த வாரம் அதே தலைமை பொறுப்பை வகிக்கும் அவர்களிடம் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் சொல்றீங்க. நான் செய்ததற்கு எனக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. அதனால் நான் அடுத்த வாரம் மாறிட்டேன் என்று சொல்லுறீங்க” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எந்த ஒரு பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்யும் தலைமை தான் நல்ல தலைமை. இது பிக்பாஸ் வீட்டிற்கு மட்டும் இல்லை. நாட்டிற்கும் இதை தான். எந்த ஒரு பிரதிபலன்களையும் எதிர்பார்க்காத தலைவர்கள் இன்றும் நம்முடைய மனதில் இருக்கிறார்கள். உங்கள் நிர்வாகம் சரியாக இருந்தால் உங்களுக்கான மரியாதை தானாக வந்து சேரும். உங்கள் செயலுக்கு தான் மரியாதையே தவிர, உங்கள் பொறுப்புக்கும், பட்டத்திற்கும் இல்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இவரது கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், கமல் பாஜகவை சீண்டுகிறாரா? என்றும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் வெளியாகி வருகிறது.