Jovika - Vanitha: 'என் மகளின் எதிர்காலம் ...' - பிக்பாஸ் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத வனிதா விஜயகுமார்!
Bigg Boss 7 Tamil: “ஜோவிகாவுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் அவரது எதிர்காலத்தை பாதிக்கும். சினிமாவில் எல்லாருமே படிக்காம வந்து தான் நடிகையாக மாறினார்கள்”

Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றுள்ள தனது மகள் ஜோவிகா மீதான எதிர்மறை விமர்சனங்கள் அவளது எதிர்காலத்தை பாதிக்கும் என வனிதா விஜயகுமார் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் நாலே பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு வீடுகளுக்குள்ளும் பிரிக்கப்பட்டு, சிறிய பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல் செய்ய வேண்டும், பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டன.
இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், யுகேந்திரன், நடிகை விசித்ரா, பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மாயகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர். முதல் வாரத்தில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவுக்கும் நடிகை விசித்ராவுக்கும் இடையே படிப்பு பற்றி பேசும்போது வாக்குவாதம் முற்றியது. தனக்கு விருப்பம் இல்லாததால் படிக்கவில்லை என்றும், அதையே குறிப்பிட்டு விசித்ரா பேசுவதாகவும் ஜோவிகா குறிப்பிட்டது பரப்பை ஏற்படுத்தியது.
Exactly below average children who watches bb will take this in heart and spk against their parents.. Not all children can become famous like star kid #jovika. Kindly avoid encouraging this @vijaytelevision#BiggBossTamil7#KamalHaasan #BigBossTamilpic.twitter.com/TswkUuiI7o
— ⭐ (@funclubworld) October 6, 2023
ஜோவிகா பள்ளிப் படிப்பை சரியாக படிக்காவிட்டாலும், நடிப்பு துறையில் டிப்ளமோ படித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜோவிகாவின் நடவடிக்கைகள் அவரது தாய் வனிதாவை போன்று இருப்பதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் தனது மகள் குறித்து வனிதா விஜயகுமார் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “ஜோவிகாவுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள் அவரது எதிர்காலத்தை பாதிக்கும். சினிமாவில் எல்லாருமே படிக்காம வந்து தான் நடிகையாக மாறினார்கள்.
சாய் பல்லவி மட்டுமே மருத்துவராக படித்து விட்டு நடிகையாக உள்ளார். ஆனால், எனது மகளுக்கு நான் தான் ஆதரவளிக்க முடியும். என் மகள் நேர்மையானவள். ஜோவிகா கடவுள் கொடுத்த கோடியில் ஒருத்தரான பரிசு. இன்றும் “என் அம்மா சொல்றது தான் வேதவாக்கு” என்று உள்ளே நம்பிட்டு இருக்கிறாள். அவளை என்னால் விட்டு கொடுக்க முடியவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையும் எனக்கு தேவையில்லை” என கண் கலங்கி பேசியுள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: தொக்காக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குறும்படம் போட தயாராகும் கமல்.. என்ன நடந்தது?





















