Bigg Boss 7 Tamil: தொக்காக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குறும்படம் போட தயாராகும் கமல்.. என்ன நடந்தது?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நாளுக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நாளுக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடப்பு சீசனில் மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ராம் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகர் யுகேந்திரன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான நிலையில் முதல் வார கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த அளவுக்கு முதல் வாரமே மலைபோல் பிரச்சினை வந்தது. ஜோவிகா படிப்பு தொடங்கி விஜய் வர்மா மிரட்டல் வரை அனைத்தையும் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வருகை தந்த கமல்ஹாசன், ஜோவிகா படிப்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் 2வது நாளான இன்றைய தினம் கேப்டன் விஜய்யை வைத்து சம்பவம் நடத்தியுள்ளார் கமல்ஹாசன். பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக மஞ்சள் கார்டு குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே சக போட்டியாளர் பிரதீப் ஷூ காலுடன் இடித்ததற்கு எனக்கு கோபம் வந்துரும். நான் அடிச்சிருவேன். அப்புறம் மூக்கு, வாயெல்லாம் உடைஞ்சிரும். மேலும் என் மேல் ரொம்ப பாசமான பசங்க எல்லாரும் வெளியே இருக்காங்க. நீங்க வெளியே போனதும் சம்பவம் பண்ணிருவாங்க என பேசியிருந்தார். வன்முறை பேச்சை கண்டித்த கமல் விஜய்ய்க்கு முதல் மஞ்சள் அட்டையை வழங்கினார். இன்னும் 2 வாங்கினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என தெரிவித்தார்.
இதில் இப்படியான நிலையில் இன்று 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஒருத்தருடைய சோகத்தைப் பற்றி கிண்டல் செய்து பேசுனீங்க. நான் என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேன். ஆனால் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
#Day7 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 8, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/oBOAM0wJ6U