மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: ‘சொருகிடுவேன்.. வாயை மூடு..’ என்ற நிக்சனை வெளுத்து வாங்கிய ஷனம் ஷெட்டி!
Bigg Boss 7 Tamil: ப்ரோமோவில் ஒரு கட்டத்துக்கு மேலே சென்று அர்ச்சனாவை நாயே என்று நிக்சன் கேள்வி கேட்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோவில் “சொருகிடுவேன்.. வாயை மூடு” என அர்ச்சனாவை அநாகரிகமாகப் பேசும் நிக்சனை உடனே எலிமினேஷன் செய்ய வேண்டும் என்று சனம் ஷெட்டி காட்டமாகக் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது. இந்த நிலையில் 67வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் முற்றி அளவுக்கு மீறி வார்த்தைகளை விடும் அளவுக்கு சென்றுள்ளது.
ப்ரோமோவில், நிக்சன் அர்ச்சனாவைப் பார்த்து “இதற்கு நீ லாயக்கில்லை” என்று கூற, அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஒரு பெண்ணை இப்படிலாம் கேவலமா பேசலாமா?” என்று கேட்கிறார். அடுத்த ப்ரோமோவில் அர்ச்சனாவைப் பார்த்து “வைல்டு கார்டு என்ட்ரியாக எப்படி வந்தியோ அப்படியே ஓடு” என்ற நிக்சன், “கருமம் மூஞ்சியைப் பாரேன்.. இதுலாம் ஒரு மூஞ்சியா” எனக் கூறுகிறார். மேலும், இருவருக்குமான வாக்குவாதத்தின் இறுதியில் ‘சொருகிடுவேன்’ என்று அர்ச்சனாவை பார்த்து நிக்சன் கூறுகிறார்.
மற்றொரு ப்ரோமோவில் ஒரு கட்டத்துக்கு மேலே சென்று அர்ச்சனாவை ‘நாயே’ என்று நிக்சன் கேட்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இப்படி அர்ச்சனா மற்றும் நிக்சன் சண்டை பிக்பாஸ் வீட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் நிக்சனுக்கு எதிராக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் நடிகை சனம் ஷெட்டி நிக்சனின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ”2 நிமிட வீடியோவில் நிக்சன் யார் என்பதை அவரது வார்த்தைகளே கூறுகிறது. நானே.. சொருகிடுவேன் போன்ற வார்த்தையின் அர்த்தம் என்ன..? இவர்கள் தானா பிரதீப்க்கு எதிராக ரெட் கார்டு கொடுத்தனர்?
இதுக்கு தான் சேவ் பண்ணீங்களா விஜய் டிவி.. இன்று நிக்சன் பேசியது விவாதிக்கப்பட வேண்டியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாரத்தின் இறுதியில் கமல்ஹாசன் இது பற்றியும் வினுஷா பற்றியும் பேசியாக வேண்டும்..” எனக் கூறியுள்ளார்.
2min silence to those who are justifying #Nixen 's third rated words today!
— Sanam Shetty (@ungalsanam) December 7, 2023
'Naaye', 'Cheri'...and WTH does 'Sorangiduven' mean?!
This guy raised #RedCard for #Pradeep!
Idhuku dhan save pannengala @vijaytelevision ?
Whether #Archana triggered him or not...whether you dislike…
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion