Bigg Boss 7 Tamil: கதறி அழுத வனிதா மகள் ஜோவிகா.. கைதட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. என்ன நடந்தது?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் அழும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் அழும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஏறக்குறைய முதல் நாளில் இருந்தே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே பிரச்னை வெடிக்க தொடங்கிவிட்டது. அதற்கேற்றாற்போல் பல்வேறு பின்னணியை கொண்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
நடப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ், எழுத்தாளர் பவா செல்லதுரை, சீரியல் நடிகர் சரவண விக்ரம், நடிகை விசித்ரா, ராப் பாடகர் நிக்ஸன், டான்ஸர் ஐஷூ, பாடகர் யுகேந்திரன் வாசுதேவன், நடிகர் பிரதீப் ஆண்டனி, சீரியல் நடிகர் விஷ்ணு விஜய், யூட்யூபர் பூர்ணிமா ரவி, நடிகை மாயா கிருஷ்ணா, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார், டான்ஸர் விஜய் வர்மா, மாடல் அழகி அனன்யா ராவ், நடன இயக்குநர் மணி சந்திரா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, நடிகை அக்ஷயா உதயகுமார், சீரியல் நடிகை வினுஷா தேவி ஆகிய 18 பேரும் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
Jovika is happy to finally realize her abilities and to start winning in life.#BiggBossTamil7 pic.twitter.com/vGYIZEtnfL
— Bigg Boss Follower (@BBFollower7) October 4, 2023
இப்படியான நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். முன்பே நடிகையாகவும், நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளமும் வனிதாவை சுற்றியிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருபடி மேலே தான் கொண்டு சென்றது. வனிதா இருந்தாலே பிக்பாஸ் நிகழ்ச்சி கலவர பூமியாக செல்லும் என்னும் அளவுக்கு பெர்பார்மன்ஸில் பிண்ணியிருப்பார். அவர் ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதனிடையே 7வது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா கலந்துக் கொள்ளப்போகிறார் என்றதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அம்மாவைப் போல இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் தனக்கு என்ன தேவையோ அதை சரியாக கேட்டு பெறுவதன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக உள்ளார் ஜோவிகா. இந்த சீசனில் மிகவும் இளம் வயது போட்டியாளரே இவர் தான். முதல் நாளில் தனக்கு படிப்பு வரவில்லை என்றும், நடிக்க விருப்பப்பட்டு பயிற்சி எடுத்து வருவதாகவும், இந்த வீட்டில் யாரும் இதைப்பற்றி பேச வேண்டாம் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் அதையும் மீறி சிலர் ஜோவிகாவின் படிப்பு குறித்து ரகசியமாக தங்கள் கருத்துகளை பறிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டி ஒன்றில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஜோவிகா தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் "Know your Housemates" என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது 3வது நாள் எபிசோடில் இருந்து இன்றும் தொடர உள்ளது. இதில் ஜோவிகா விஜயகுமார் மற்றும் சரவண விக்ரம் இருவரும் கலந்து கொண்டு விவாதம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இதில் பேசிய ஜோவிகா விஜயகுமார், “நான் ஒன்னே ஒன்னு சொல்ல விருப்பப்படுறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில கடந்த 2 நாட்களாக ஸ்கூல் பற்றி எல்லாம் சொல்லிருக்கேன். இதுக்கு முன்னாடி எல்லாம் நான் எதுலேயும் அவ்வளவாக ஜெயித்தது இல்லை. நான் ஸ்கூல்ல விவாத நிகழ்ச்சி எல்லாம் பண்ணனும்ன்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா பண்ண விடல. இந்த 3 நாள்ல நடந்ததை பார்க்குறப்ப எனக்கு அந்த திறமை இருக்குன்னு தெரியுது" என அழுகிறார். இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் ஜோவிகாவை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி பாராட்டுகின்றனர்.