மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: பிரதீப், அர்ச்சனா இப்போ ஜோவிகா.. ஊமைக்குசும்பு செய்து கேம் ஆடும் ரவீனா.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Bigg Boss7 tamil : அர்ச்சனா - விஷ்ணு பேசிக்கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அடிபட்ட ரவீனாவுக்கு அதிகரிக்கும் ஹேட்டர்ஸ்!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டுக்குள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சலசலப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த சலசலப்பை மேலும் எரியூட்டப்பட்டது ஒரே நேரத்தில் அதிரடியாக ஐந்து போட்டியாளர்கள் வீட்டுக்குள்  என்ட்ரி கொடுத்த பிறகு தான். முதல் இரண்டு வாரம் இருந்த ஒட்டுமொத்த கேமையுமே அப்படியே புரட்டிபோட்டுவிட்டனர். வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அன்னபாரதி, கானா பாலா, பிராவோ அடுத்தடுத்து வெளியேற கொளுத்தி போட்ட பட்டாசு போல படபடவென தினேஷ் ஒரு பக்கம் வெடிக்க சரவெடியாக தூள் கிளப்புகிறார் அர்ச்சனா. 

Bigg Boss 7 Tamil: பிரதீப், அர்ச்சனா இப்போ ஜோவிகா.. ஊமைக்குசும்பு செய்து கேம் ஆடும் ரவீனா.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகளும் சச்சரவுகளும் தான் இணையத்தில் தினசரி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அந்த வகையில் மாயா - அர்ச்சனா சண்டை ஒருவழியாக ஓய, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஷ்ணு - அர்ச்சனா சண்டை முற்றிய நிலையில் எல்லையை மீறியது. தண்டம் என விஷ்ணு அர்ச்சனாவை சொல்ல, அர்ச்சனாவோ விஷ்ணுவை பார்த்து குப்பை தொட்டிக்கு சமம் என தாறுமாறாக வெடித்தது பிக் பாஸ் வீடு. இருப்பினும் இந்த சண்டையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சிவனே என இருந்து வருகிறார்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸ். 

அந்த வகையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா மற்றும் விஷ்ணு பிரெண்ட்டாகிவிடலாம் என இருவரும் சமரசம் பேசிக்கொள்ள முயற்சி செய்யும் போது அந்த நேரத்தில் ரவீனா அங்கே வந்து "நீங்க பிரெண்ட் எல்லாம் ஆகாதீங்க. சண்டை போடுங்க அது தான் நல்லா இருக்கு. அதுவும் இல்லனா போரடிக்கும்" என விஷ்ணுவிடம் சொல்ல அர்ச்சனாவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. 

Bigg Boss 7 Tamil: பிரதீப், அர்ச்சனா இப்போ ஜோவிகா.. ஊமைக்குசும்பு செய்து கேம் ஆடும் ரவீனா.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

"இது நியாயம் இல்லை ரவீனா. பிரெண்ட் எல்லாம் ஆகாதீங்க... சண்டை போடுங்க என்றால் உங்களுக்கு ஜாலியா இருக்கா? நான் எமோஷனலாக உடைந்து போவது உங்க எல்லாருக்கும் ஜாலியா இருக்கா? நாங்க இரண்டு பெரும் பேசிகிட்டு இருக்கும் போது அவரை ஊசி குத்தி ஏத்திவிடுறமாதிரி பேசுறீங்க" என ரவீனா மேல பாய "என்னை எதுக்கு என்னை இப்ப திட்டுறீங்க. நான் ஏதோ அவர் கிட்ட ஜாலியா பேச வந்தேன். அப்படி உங்களுக்கு நான் வந்து பேசினது பிடிக்கவில்லை என்றால் என்னுடைய பிரைவேட் டைமில் தலையிடாதே  என சொல்லிடுங்க" என சொல்ல "இந்த வீட்டில பிரைவேட் டைம் என எதுவும் கிடையாது. நாங்க பேசிகிட்டு இருக்கும் போது நீ ஏத்திவிடறமாதிரி பேசுறனா சண்டை போடுறத நீ என்ஜாய் பண்ணற. அப்படி தானே" என அர்ச்சனா கேட்க "ஆமா... நான் என்ஜாய் செய்யுறேன்" என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார் ரவீனா. இது அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

ஒரு சில பிக்பாஸ் ரசிகர்கள் ரவீனாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் பலரும் ரவீனாவின் நடவடிக்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ரவீனா உசுப்பேத்தி விடுவதையே வேலையாக வைத்து இருக்கிறார் என்றும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு முக்கியமான காரணமே ரவீனா தான் எனவும் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. மேலும் இன்று இறுதியாக வெளியான ப்ரோமோவில் ஜோவிகாவிடமும் ரவீணா வம்பிழுத்து அவரை அழ வைத்தது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

இப்படி சத்தமில்லாமல் எல்லா பிரச்னைகளிலும் ரவீனா பங்காற்றி வருவது பிக்பாஸ் ரசிகர்களின் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இதுதான் ரவீனாவின் கேம் பிளான் இப்படியே ஃபைனல்ஸ் வந்து விடுவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Embed widget