Bigg Boss 7 Tamil: இந்த வாரம் அழுகை வாரம்.. 79 நாள்களுக்குப் பின் உறவுகளை சந்திக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
Bigg Boss 7 Tamil: அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மா, பூர்ணிமா என அனைவரது பெற்றோரும் வரிசையாக வருகிறார்கள்.
பிக்பாஸ் (Bigg Boss 7 Tamil) வீட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரீஸ் டாஸ்க் (Freeze Task) இன்றைய எபிசோட் முதல் தொடங்குகிறது
அதன்படி தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் “இந்த வாரம் என்ன வாரம்னு உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்” என பிக்பாஸ் சொல்ல, “ரொம்ப நாள் காத்துட்டு இருந்த ஃப்ரீஸ் டாஸ்க்” என்கிறார் விஷ்ணு.
அதன்படி இந்த டாஸ்க்கில் முதலில் பூர்ணிமாவின் அம்மா வர, அவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்க மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார் பூர்ணிமா. தொடர்ந்து அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மா ஆகியோரின் பெற்றோர் வர இவர்கள் அனைவருடனும் பிக்பாஸ் வீட்டின் கேமராவில் போட்டியாளர்கள் குடும்பமாக இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் பல உணர்வுப்பூர்வமான தருணங்களும், கூடவே களேபரமாகவும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஹவுஸ்மேட்ஸ் வரும்போது அவர்கள் அன்பை வெளிப்படுத்துவதுடன், கூடவே வெளியில் இருந்து பிற போட்டியாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு வந்து அது பற்றி தெரிவித்து தங்கள் பிள்ளைகளை, அக்கா, தங்கைகளை எச்சரித்துவிட்டு செல்வது வழக்கம். இதன் பின் பொதுவாக போட்டியாளர்களின் கேம் பிளான் வேறு கோணத்துக்கு மாறி அதுவே இறுதி மேடை வரை தொடரும்.
இந்த சீசனில் முன் பேசுவதும் பின் பேசுவதும் வழக்கத்துக்கு மாறாக தூக்கலாக உள்ள நிலையில், இந்த வாரம் எந்தெந்த குடும்பத்தினர் என்ன சம்பவம் செய்துவிட்டு போகப்போகிறார்கள் என எதிர்பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.