Bigg Boss 7 Tamil Promo: விதிகளை மீறிய விசித்திரா, யுகேந்திரன்.. சண்டைக்கு சென்ற பிரதீப் ஆண்டனி.. பிக்பாஸ் ப்ரோமோ இதோ..!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 2வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விசித்திரா மற்றும் பிரதீப் ஆண்டனி இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 2வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விசித்திரா மற்றும் பிரதீப் ஆண்டனி இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 வரையும், வார இறுதி நாட்களில் 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7வது சீசனாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று முதல் எபிசோட் ஒளிபரப்பானது. அப்போது கேப்டன் விஜய் வர்மாவை கவர தவறியதாக கூறி நிக்ஸன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா தேவி, ரவீனா தாஹா ஆகிய 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.அவர்களுக்கென்று தனி விதிமுறைகளும் உள்ளது. அதில் வீட்டின் 3 வேளைக்கான உணவை பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் முடிவு செய்வார்கள். அதனை தான் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சமைக்க வேண்டும் என்ற விதியும் ஒன்று. இப்படியான நிலையில் இன்று இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
அந்த வீடியோவில், “ஸ்மால் பாஸ் வீட்டுல இருக்குறவங்க தான் சமைக்கணும்ன்னு விதிகள் இருக்கு. இதனை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்திரா மற்றும் யுகேந்திரன் மீறிட்டிங்க. இனிமேல் நீங்க ரெண்டு பேரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு போக வேண்டும் என தெரிவிக்க அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். அப்போது பிரதீப் ஆண்டனி ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் நாமினேட் ஆவாதவர்கள் இரண்டு பேரை இங்கே அனுப்பி விடுமாறு கேட்கிறார்.
#Day2 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 3, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV" pic.twitter.com/ewKNDR7zUM
இதைக் கேட்டு கடுப்பாகும் விசித்திரா, எதுக்கு 2 பேரை இங்கே வர வேண்டும் என சொல்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு, நீங்க 2 பேர் போறீங்க, அதற்கு பதிலா 2 பேர் இங்கே வேணும்ல என சரியான காரணத்தை தெரிவிக்கிறார். உடனே எங்க 2 பேருக்கு சரிசமமான போட்டியாளர்கள் அந்த வீட்டில் இருக்கிறார்களா என விசித்திரா கேட்க, குறுக்கே வரும் கேப்டன் விஜய், நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியுதா?” என பிரதீப் ஆண்டனியைப் பார்த்து கேள்வி கேட்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Cool Suresh: ”என்னோட வேட்டியை கொடுங்க பிக்பாஸ்” .. கேமராவிடம் கெஞ்சிய கூல் சுரேஷ்.. வீடியோ இதோ..!