Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா காட்டிய வினுஷா, யுகேந்திரன்.. இவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வினுஷா மற்றும் யுகேந்திரன் நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வினுஷா மற்றும் யுகேந்திரன் நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரசிகர்களின் மிகப்பெரிய பேவரைட் ஆன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
முதல் வாரம் அனன்யா ராவ் வெளியேற்றப்பட, அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லதுரை தாமாக முன்வந்து வெளியேறினார். இதனால் 2வது வாரத்தில் யாரும் வெளியே அனுப்பப்படவில்லை. இதனிடையே 3வது வாரத்தில் முதல் வார கேப்டனாக இருந்து, தனது ஆக்ரோஷ செயல்பாடுகளுக்கு கமலிடம் எச்சரிக்கை விடுக்கும் விதமாக மஞ்சள் அட்டை வாங்கிய விஜய் வர்மா வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் இரண்டு பேரை பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார்.
சும்மாவே முந்தைய சீசன்களை விட நடப்பு சீசன் படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது. சுவாரஸ்யமே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவரும் கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்றே விதிகளை மீறியும், அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியும், செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ என 5 பேர் புதிதாக பங்கேற்றுள்ளதால் இந்நிகழ்ச்சி இனிமேல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் முதல் நாளில் போட்டியாளர்களாக பங்கேற்ற சின்னத்திரை நடிகை வினுஷா மற்றும் பாடகர் யுகேந்திரன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வளவு சீக்கிரம் இரட்டை எவிக்ஷன் நடைபெற்றதால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் நடிகை வினுஷா மற்றும் பாடகர் யுகேந்திரன் ஆகியோரின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுகேந்திரனுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், 28 நாட்களுக்கு ரூ.7,56,000 சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் வினுஷாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், அவர் 28 நாட்களுக்கு 5,60,000 சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: Leo: "லியோ படம் வசூலா? லலித்குமாருக்கும், எனக்கும் நடந்தது இதுதான்!" புட்டு, புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்