Bigg Boss 6 Tamil : ‘இது ஒன்னுதான் கேடு..’ விக்ரமனை அவமதித்த ஜனனி!
Bigg Boss 6 Tamil : முன்னதாகவே விக்ரமனுக்கும் ஜனனிக்கும் இடையே பல பிரச்னைகள் எழுந்தது. விக்ரமனை அவமரியாதையாக ஜனனி பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
விக்ரமன் மீது ஜனனி தொடர்ந்த வழக்கில் விக்ரமன் தரப்பு வெற்றி பெற்றதால் ஜனனி சற்று அதிருப்தியாக இருக்கிறார்.இன்று வந்த முதல் இரண்டு ப்ரோமோக்களில், விக்ரமன் மீது ஜனனி தொடர்ந்த வழக்கு பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
முதல் மற்றும் இரண்டாவது ப்ரோமோ :
உங்கள் தமிழில் பிரச்சனை போல என்று விக்ரமன் அவர்கள் ஜனனியை சுட்டிகாட்டியது மனவேதனையை அளிக்கிறது என வழக்கு குறித்து அசிம் வாதிட துவங்குகிறார்.
அப்போது விக்ரமன் தரப்பில் வாதாடும் குயின்ஸி, “உங்கள் மொழியில் சிரமம் உள்ளதா என்றே சொன்னார்” என குறிப்பிட்டார்.பின், விக்ரமன் “அவங்க தமிழ்ல பேசுவரது எனக்கு பிரச்னை கிடையாது. தெந்தமிழ் பேசுவது எனக்குமே தடுமாற்றம்தான்” என அவரது தரப்பு நியாயத்தை பேசினார்.அதற்கு அடுத்து ஜனனி, விக்ரமன் பேசியது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது என சொன்னார்.
#Day46 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/4x6diCs7kw
— Vijay Television (@vijaytelevision) November 24, 2022
இதனை தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் மாற்றி மாற்றி பேசினர். இந்த வழக்குக்கு மணிகண்டா ராஜேஷ் நீதிபதியாக அமர்தப்பட்டுள்ளார். இந்த வாதங்கள் நிறைவடைந்து அனைவரும் பிக்பாஸ் வீட்டில் சென்று தனது வேலைகளை பார்த்து வந்தனர். அப்போது விக்ரமனை, ஜனனி அழைத்து பேசினார். முதலில், விக்ரமனை சமாதனம் செய்யும் பாணியில் பேசினார் ஜனனி. இறுதியில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
#Janany feels HMs are discouraging whenever #Azeem speaks #BiggBossTamil6 pic.twitter.com/pti7HYo6eN
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 24, 2022
அந்த வழக்கானது விக்ரமனுக்கு சாதகமாக நடந்து முடிந்தது. அதிருப்தியாக இருந்த ஜனனி, விக்ரமன் எப்படி இதில் ஜெயித்தார் என அவரின் வருத்தத்தை அமுதவாணனிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.
#Janany papa unga vengeance oda uchila irukinga Pola ninga #vikraman ah evualvu down pandringalo he gain more supports from outside 🔥🔥🔥#vikraman never let down any one in that house no one is match for #vikraman in that house#Azeem #Shivin #BiggBossTamil6 #BiggBoss6Tamil pic.twitter.com/iMcXdFOe44
— thalapathy sk (@sarvesh_SK13) November 23, 2022
முன்னதாகவே விக்ரமனுக்கும் ஜனனிக்கும் இடையே பல பிரச்னைகள் எழுந்தது. ஒருமுறை, விக்ரமன் நன்றாக டாஸ்க் ஒன்றில் விளையாடிதால்
அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. அப்போது ஜனனி, “ம்ம்ம்.. இது ஒன்றுதான் இல்லை கேடு குடுங்கள்” என்று சலிப்புடன் பேசினார்.