மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : களமிறக்கப்பட்ட அட்வகேட் ஆயிஷா.. அவமானப்படுத்திய மைனா.. எரிமலையாய் வெடித்த தனம்!

இந்த வாரத்தில், பிக்பாஸ் நீதிமன்றம் என்ற டாஸ்க் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த பிக்பாஸ் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏடிகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில், “பிக்பாஸ் நீதிமன்றம்” என்ற டாஸ்க் நடக்கவுள்ளது என்பதை இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்கள் காண்பிக்கின்றன.

கடந்த வாரத்தில், குறைந்த ஓட்டுகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதைதொடர்ந்து, நேற்று இந்த வாரத்தின் கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற மைனா, அனைத்து போட்டியாளர்களையும் 4 அணிகளாக பிரித்தார். இதனால், தனலட்சுமி சற்று கடுப்பானார். இப்போது வெளியான முதல் ப்ரோமோவில், இதில் பிக்பாஸ் நீதிமன்றம் எனும் டாஸ்க் இந்த வாரத்தில் செயல்படுத்தபடவுள்ளது.

டாஸ்க்கின் விதிமுறைகள் :

ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.

இன்று வெளியான ப்ரோமோக்களின் தொகுப்பு :

இந்த பிக்பாஸ் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏடிகே தனது கடமையை ஆற்ற, ஒவ்வொருவரின் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் அனைவரும் விடாப்படியாக வாதம் செய்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள், இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் இடம்பெற்றுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் சாதரணமாகவே, பிரச்னைகளுக்கும் வாக்குவாதங்களுக்கும் பஞ்சமில்லை. இப்போது இந்த பகிரங்கமான டாஸ்க்கானது, எரியும் நெருப்பில் எண்னெயை ஊற்றும் வகையில் அமையும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இறுதியாக வெளியான மூன்றாவது ப்ரோமோவில், தனலட்சுமி, ஆயிஷாவை தனது வழக்கறிஞராக தேர்வு செய்கிறார். தனலட்சுமியின் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆயிஷா, மைனா நந்தினி மற்றிம் ஷிவின் ஆகிய இருவரையும் சாட்சிகளாக முன் வர சொல்கிறார். ஆனால், மைனா நந்தினி மற்றும் ஷிவின் சாட்சிகளாக முன்வர மறுக்கின்றனர்.

எஞ்சிய போட்டியாளர்கள்:

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.

இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Embed widget