Bigg Boss 6 Tamil : உச்சக்கட்ட சண்டையில் அசிம் ஏடிகே.. நகைகளை ஒளித்து வைத்த ஷிவின்..பரபரக்கும் பிக்பாஸ்!
“நான் ஒன்னு சொல்லட்டும்மா.. உனக்கும் எனக்கும் அறவே ஒத்துப்போகாது” என ஏடிகே அசிமை நோக்கி பேசினார்.
இன்று வெளியான ப்ரோமோவில் அசிமும் ஏடிகேவும் சண்டை போட்டுள்ளனர். இது குறித்து விவரமான தகவலை இங்கு காணலாம்.
இந்த வாரத்திற்கான டாஸ்க்காக “ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்” என்ற விளையாட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறவுள்ளதாகவும், இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிய வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது.
முதல் ப்ரோமோ காட்சியில், நன்றாக பழகிக்கொண்டு வந்த ஏடிகே மற்றும் அசிமிற்கு சண்டை மூண்டது. “ மகேஸ்வரியை கழுவி ஊத்துராங்க என்று சொன்னல.. வெளியே போய் பாரு உன்னை எவ்வளவு பேர் கழுவி ஊத்துராங்கன்னு. இனிமே எதுவாக இருந்தாலும் உன் மூஞ்சுக்கு நேரா சொல்கிறேன். நான் ஒன்னு சொல்லட்டும்மா.. உனக்கும் எனக்கும் அறவே ஒத்துப்போகாது” என ஏடிகே அசிமை நோக்கி பேசினார்.
#Day39 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/bPF8pQ0cxU
— Vijay Television (@vijaytelevision) November 17, 2022
நேற்று வரை அண்ணன் தம்பியாக பழகிவந்தவர்களிடம் இன்று பிரிவினை ஏற்பட்டுள்ளது. இதுவரை இவர்கள் இருவரும் சேர்ந்து, மற்ற போட்டியாளர்களை பற்றி புரணி பேசி வந்தார்கள். மிஞ்சிப்போனால் வீண் சண்டைகளில் ஈடுபட்டு வந்தனர். அதை தவிர்த்து இவர்கள், எந்தவொரு உறுப்படியான வேலையும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது போட்டியென்று வந்தால் அண்ணன் என்ன தம்பி என்ன..என்ற கதைப்போல் ஆகிவிட்டது ஏடிகேவிற்கும் அசிமிற்குமான உறவு.
இரண்டாவது ப்ரோமோவில், ஷிவின் நகைகளை திருடி பருப்பு டப்பாவிற்குள் ஒளித்து வைக்கிறார். இதைப்பார்த்த தனம் ராஜா ராணியை கூப்பிட்டு அனைவரின் முன்பும் ஒளித்து வைக்கப்பட்ட அந்த அணிகலன்களை வெளிப்படுத்துகிறார்.
#Day39 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/Ld1iAowAxX
— Vijay Television (@vijaytelevision) November 17, 2022
கடந்த வாரத்தில், பணத்தை கல்லாவில் இருந்து எடுத்து வைத்தற்காக தனம் மீது பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் சோகமாகவே இருந்து வந்தார் தனம். ஆனால், இந்த டாஸ்க்கில் அனலாய் செயலபட்டு, அவர் மீது இருந்த அபிப்பிராயத்தை மாற்றும் அளவிற்கு செயல்பட்டுள்ளார்.