மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : அஸிமுக்கு கட்டம் கட்டிய கமல்...வாண்டடாக வந்து சிக்கிய ஆயிஷா..இன்னைக்கும் கச்சேரி தான்..!

சக போட்டியாளர்களை கிண்டல் செய்தது, ஆக்ரோஷத்துடன் கத்தியது என அஸிமின் நடவடிக்கைகளை கமல் கடுமையாக கண்டித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றும் அஸிமை கமல்ஹாசன் கடுமையாக சாடும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 

இதில் ஜி.பி.முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, முதல் எவிக்‌ஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2வது எவிக்‌ஷனாக  சக பெண் போட்டியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசல் கோலார் வெளியேறியுள்ளார். இதனிடையே நேற்றைய எபிசோடில் கமல் கடந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்ட, நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் பற்றி பேசினார். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இதில் ஷெரினா கீழே விழ தனலட்சுமி தான் காரணம் என அஸிம் சொன்னார். இதை சக போட்டியாளர்களில் சிலரும் நம்பி விட்டனர். ஆனால் தனமோ தான் உறுதியாக தள்ளவில்லை எனவும், கமல் நிரூபித்தால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க தயார் என சொன்னார். நீண்ட சீசனுக்கு பிறகு குறும்படம் போட்டு கமல் தனலட்சுமி மீதான குற்றச்சாட்டை இல்லை என நிரூபித்தார். இதில் அஸிமின் எதிர்பாராத உடல் பலத்தால் தள்ளியதால் தான் இருவரும் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் சக போட்டியாளர்களை கிண்டல் செய்தது, ஆக்ரோஷத்துடன் கத்தியது என அஸிமின் நடவடிக்கைகளை கமல் கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் ஆரம்பத்தில்  நான் விளையாட விரும்பலை என சொன்ன ஆயிஷா ஒரு கட்டத்தில் ரச்சிதாவின் பொம்மையை அமைதியாக வைத்துக் கொண்டு நின்றதால் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். 

இதனை சுட்டிக்காட்டி கமல் கேட்க, அதற்கு ஆயிஷா எனக்கு சத்தியமா தெரியாது. அந்த பொம்மையை தடுக்குறதுக்கு இவங்களுக்கு பிளான் இருந்துச்சுன்னு என சொல்கிறார். அதற்கு ரச்சிதா விளையாடணும்ன்னு ஆசைப்படுற என் பொம்மை உள்ளே வந்துருக்கலாமேன்னு தோணுச்சு என சொல்கிறார். உடனே கமல் ஆயிஷாவிடம், விளையாடாத விரும்பாத நீங்கள் அவர் சொன்னாருன்னு ரச்சிதா பொம்மையை எடுத்துட்டு போய்ட்டீங்க என கேட்க, முதலில் யாரும் எடுக்க சொல்லல என கூறும் ஆயிஷா பின் அஸிம் அண்ணா தான் அதை எடுத்துட்டு போகச் சொன்னாரு என உண்மையை போட்டுடைக்கிறார். 

அஸிமிடம் திட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கொண்டீர்கள் என கமல் கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நேற்றே கமலிடம் கடும் விமர்சனத்தை சந்தித்த அஸிம், இன்றும் வாங்கிக் கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget