BiggBoss 5 Tamil Promo | ‛எனக்கு வேணாம் இந்த கேம்...’ ராஜூ - பாவனி டிஷ்யூம்!
இன்றைய ப்ரொமோவில் பாவனி - ராஜூ சண்டை ஹைலைட்டாகி இருக்கிறது. அபினய் - பாவனி விவகாரத்தில் ராஜூ மன்னிப்பு கேட்டும் சண்டை தொடர்ந்து வருகிறது.
Bigg Boss 5 Tamil Day 59: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை அடுத்து, நவம்பர் 28-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த வார பிக் பாஸ் சிறப்பு எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து, அக்ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அரங்கேறியது. இதில், ப்ரியங்கா - இமான், ப்ரியங்கா - தாமரைச்செல்வி மோதல் வெடிக்க, வீடு சண்டை களமானது. இதற்கு நடுவே, இன்றைய ப்ரொமோவில் பாவனி - ராஜூ சண்டை ஹைலைட்டாகி இருக்கிறது. அபினய் - பாவனி விவகாரத்தில் ராஜூ மன்னிப்பு கேட்டும் சண்டை தொடர்ந்து வருகிறது. இதில், பாவனிக்கு ஆதரவாக அமீர் நடுவில் குறிக்கிட்டு பஞ்சாயத்து செய்து வருவது இன்னும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
#Day59 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/HeGSI466dI
— Vijay Television (@vijaytelevision) December 1, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்