இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு..சூப்பர் டீலக்ஸ் அறையில் இருப்பவர்களுக்கு இத்தனை சலுகைகளா..!சூடுபிடிக்கும் ஆட்டம்
Bigg Boss Tamil 9 : பிக்பாஸ் வீட்டில் சூப்பர் டீலக்ஸ் பிரிவில் உள்ள போட்டியாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என பார்க்கலாம்

பிக்பாஸ் தமிழில் 9 ஆவது சீசன் நேற்று அக்டோபர் 5 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , எஃப்.ஜே , வி.ஜே பார்வதி , துஷார் , கனி, சபரி , பிரவீன் காந்தி , கெமி , ஆதிரை , ரம்யா ஜோ , வியானா , வினோத் , சுபிக்ஷா , அப்சரா சிஜே , நந்தினி , கலையரசன் , விக்ரம் , கமருதீன் ஆகிய 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள். இந்த முறை போட்டியாளர்கள் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரு பேட்ஜ்களை தேர்வு செய்தார்கள். இதனடிப்படையில் நீல பேட்ஜ் தேர்வு செய்தவர்கள் சூப்பர் டீலக்ஸ் என்கிற சிறப்பு அறையிலும் மற்ற போட்டியாளர்கள் வழக்கமான பிக்பாஸ் வீட்டிலும் இருக்கப் போகிறார்கள். இதில் சூப்பர் டீலக்ஸ் அறையில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சூப்பர் டீலக்ஸ் அறையில் உள்ள போட்டியாளர்கள்
, அரோரா சின்க்ளேர் , ரம்யா ஜூ, துஷார் , பிரவின் காந்தி , கானா வினோத் , சுபிக்ஷா , கமுருதீன் , நந்தினி ஆகியோர் சாதாரண அறையில் உள்ளார்கள்.
சாதாரண அறையில் உள்ள போட்டியாளர்கள்
பிரவீன் ராஜ் தேவ், டாக்டர் திவாகர் , கனி திரு , அதிசயம் (FJ) , சபரி நாதன், விஜே பார்வதி கெமி , ஆதிரை சௌந்தர்ராஜன் , அகோரி கலையரசன் , விக்கல்ஸ் விக்ரம் , , வியானா , அப்சரா சி.ஜே , ஆகியோர் சூப்பர் டீலக்ஸ் அறையில் உள்ளவர்கள்
சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்களின் சலுகைகள்
1. வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் காலை விளிப்பதற்காக வேக் அப் பாடல் போடப்படும். ஆனால் சூப்பர் டீலக்ஸ் அறையில் இருப்பவர்களுக்கு வேக் அப் பாடல் என்பது கிடையாது. போட்டியாளர்கள் அவரவருக்கு தோன்றும் நேரத்தில் எழுந்துக்கொள்ளலாம். சூப்பர் டீலக்ஸ் அறையில் உள்ள அனைவரும் எழுந்து வந்த பின் தான் பிக்பாஸ் வீடு இயங்கத் தொடங்கும்.
2 . சூப்பர் டீலக்ஸ் அறையில் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட உணவை சமைத்து தரும்படி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டுக் கொள்ளலாம்
3. சூப்பர் டீலக்ஸில் இருப்பவர்கள் தங்கள் பெருமை பட்டுக்கொள்ளலாம். அந்த பெருமையை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளலாம்
4. சூப்பர் டீலக்ஸில் இருப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு நாமினேஷன் கிடையாது.
5. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை வேலை வாங்குவது அவர்களை மேற்பார்வையிடுவதும் தான் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களின் முக்கிய வேலை.
6. சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்
சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இப்படி பல சலுகைகளை அனுபவிக்க பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சமையல் முதல் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் உணவுகளை சமைத்து தர வேண்டும். மற்ற போட்டிகளில் பங்கேற்றாலும் அதற்கான பலன் கிடைக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாது.





















