மேலும் அறிய

Bigg Boss Tamil 8: கலங்கிய ஜாக்குலின்..என்னாச்சு? - பிக் பாஸ் அப்டேட்!

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 101 நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் -8 நிகழ்ச்சியின் 'Grand Finale' நாளுக்காக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் மூன்று நாட்களில் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த வாரத்திற்கான எவிக்சன் பற்றி பேசப்பட்டு வருகிறது. 

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. 101- வது நாள் ஒளிப்பரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சியில் வெற்றி பெறபோவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.

பணப்பெட்டி டாஸ்க்:

ஒவ்வொரு ரவுண்ட் இருப்பதாக ப்ரோவில் காட்டப்பட்டுள்ளது.  முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த முறை முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சி செய்வதாக ப்ரோமோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. 

அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 60 மீட்டர் தொலைவில் ரூ.5,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 30 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இதை எடுக்க போட்டியாளர்கள் முயற்சி எடுக்கின்றனர். 

வெளியேறபோவது யார்?

பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துகொண்டு வீடு திரும்பாதவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என விதிமுறை. 

முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ராயன் ஆகிய போட்டியாளர்களில் யார் இறுதிச்சுற்றுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிய வரும். அப்படியிருக்கையில், ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் வீடு திரும்பாததால் விதிமுறைப்படி அவர் போட்டியிலிருந்து வெளியேறினார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இது குறித்து பலர் தகவல்கலை பகிர்த்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். “ நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. ஆனால், நீங்கள் மக்களால் வெளியேற்றப்படவில்லை என்பதே நீங்கள் சிறப்பாக விளையாடியதற்கான சாட்சி.” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள புரோமோவில் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுக்க பவித்ரா, ஜாக்குலின் இருவரும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.  அப்போது பவித்ரா, 'உள்ளவே வர முடியலைன்னா கூட பரவால ஜாக் நான் போறேன்' என்று சொல்கிறார். அதற்கு ஜாக்குலின் சரி என்கிறார். பவித்ராவை பணப்பெட்டி எடுக்க அனுமதிக்கிறார்.

 'எல்லாரையும் ரெப்ரசண்ட் பண்ற பவி நீ. பணத்தை எடுத்திட்டு வந்திருவனு நம்பி நான் உனக்கு கொடுத்திருக்கேன்' என்று ஜாக்குலின் சொல்கிறார். 

பவித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீடு திரும்பினாரா? என்பது இனிதான் தெரிய வரும்?

இன்னொரு ப்ரோமோ வீடியோவில்,”பிக் பாஸ்.. இந்த வீட்டில் திரும்ப பார்க்க முடியாதோன்னு பயமாக இருக்கு.” என்று பணப்பெட்டியை எடுக்க செல்லும் முன் ஜாக்குலின் பேசியிருக்கிறார். 

80 மீட்டர் தொலைவில்  35 விநாடிகளில்  பணப்பெட்டியை எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பவதாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் ஜாக்குலினை வரவேற்பதாக காட்சிகள் உள்ளன. ஆனால், ‘ முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்!’ என பிக் பாஸ் சொல்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இன்று ரூ. 8 லட்சம் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஜாக்லின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்லின் வெற்றிப் பெறுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலின் வெளியேறினாரா அல்லது வெற்றி பெற்றாரா என்பது இனிதான் தெரியவரும். 

 

'பிக் பாஸ் Finale': 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் Finale வரும் 17-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். போட்டியாளர்கள் நீங்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget