இனிமையான இந்நாளை ராசிபலனுடன் தொடங்குங்கள்!

Published by: ABP NADU

மேஷம்

தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும்.

ரிஷபம்

எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள், எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

மிதுனம்

மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.

சிம்மம்

பணிகளில் நிதானத்துடன் செயல்படுங்கள், சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.

கன்னி

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும், பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.

துலாம்

சேமிப்பை தொடர்பான சிந்தனைகள் மேம்படும், கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும், வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும், கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

மகரம்

வியாபார முன்னேற்றத்திற்கான அலைச்சல்கள் உண்டாகும், எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

கும்பம்

வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும், சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

தன்னம்பிக்கை மேம்படும், எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும்.