Thamari and Iykki Berry Dance O Solriya Mama: இது எப்படி இருக்கு.. ‘ஓ சொல்றியா’பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாமரையும் ஐக்கிபெர்ரியும்.. வைரல் வீடியோ
பிக்பாஸ் போட்டியாளர்களான ஐக்கி பெர்ரியும் தாமரையும் ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Thamari and Iykki Berry Dance O Solriya Mama: இது எப்படி இருக்கு.. ‘ஓ சொல்றியா’பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாமரையும் ஐக்கிபெர்ரியும்.. வைரல் வீடியோ Bigg Boss Tamil 5 Contestents Thamari and Iykki Berry Dance O Solriya Mama Thamari and Iykki Berry Dance O Solriya Mama: இது எப்படி இருக்கு.. ‘ஓ சொல்றியா’பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாமரையும் ஐக்கிபெர்ரியும்.. வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/18/a24552f50ecebcbd89067a2b67fb9368_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண், ஐக்கி பெர்ரி, இசை வாணி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். இதனிடையே போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட ஐக்கிய பெர்ரி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று, அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
View this post on Instagram
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இவரும் தாமரையும் இணைந்து ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)