மேலும் அறிய

Bigg Boss Sherina Father: ‛கமல் சாருக்கு ஒன்றும் தெரியவில்லை...’ ஷெரினா தந்தை வேதனை!

ஷெரினா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது, நல்ல பெயரோடு போனாள். அதே போல அவள் வெளியே வரும் போதும் நல்ல பெயரோடு வரவேண்டும். அதனால் என் மகளை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஷெரினா தந்தை

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸின்  6 வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்தனர். இதில்  ஜிபிமுத்து குழந்தைகளை விட்டு இருக்க முடியவில்லை என்று கூறி வெளியேறினார்.

அதனைத்தொடர்ந்து சாந்தியும், அசல் கோலாரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனிடையே பொம்மை டாஸ்க் ஒன்று நடந்தது. அந்த டாஸ்க்கில் தனலட்சுமி, ஷெரினாவை தள்ளிவிட்டதாகவும், இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டதாகவும் காட்சிகள் அமைந்து இருந்தன. இதனால் தனலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வார இறுதியில் ஒளிப்பரப்பட்ட குறும் படத்தில், ஷெரினாவை தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இதனால் கமல் ஷெரினாவை கடிந்து கொள்ளும் வகையில் பேசி இருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்து விளையாடுவதாக கூறி, ட்ரோல் செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இது குறித்து ஷெரினாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து ஷெரினா தந்தை  சாம் சைமன் பேசும் போது, “ எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், கமல் சார் சொன்ன மாதிரி, விளையாட்டு என்றால் அடிபடுவது என்பது மிகவும் இயல்பான ஒன்றுதான். ஆனால் என் மகளுக்கு நடந்த விஷயம் அவ்வாறு எடுத்துக்கொள்ள படவில்லை. விபத்து நடந்ததிற்கு பின்னர், மக்கள் அதை வேறுவிதமாக பேசினர். ஆனால் அவளுக்கு அடிப்பட்டு இருக்கிறது. அவள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது, நல்ல பெயரோடு போனாள். அதே போல அவள் வெளியே வரும் போதும் நல்ல பெயரோடு வரவேண்டும். அதனால் என் மகளை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்களே நான் அவருடைய அப்பா.. என்னுடைய வேதனை உங்களுக்கு தெரிய வேண்டும். அவளை  மோசமாக சித்தரிக்க வேண்டாம். 

Bigg Boss Sherina Father: ‛கமல் சாருக்கு ஒன்றும் தெரியவில்லை...’ ஷெரினா தந்தை வேதனை!

கமல் சார் அடிப்பட்டுச்சா.. என்று கேட்ட போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. கமல் சார் ஷெரினாவை பார்க்க வில்லை. கமல் சாருக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் மக்கள் என்ன சொல்கிறார்களோ, உள்ளே என்ன சொல்கிறார்களோ உள்ளிட்டவற்றை வைத்து முடிவு எடுக்கிறார். அதனால் அவர் மீது எந்த தவறும் இல்லை.” என்று பேசி இருக்கிறார். 

தகவல் உதவி: இந்தியா கிளிட்ஸ் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget