Balaji Murugadoss: குடும்பமே ஊழல் குடும்பம்... வம்பை விலை கொடுத்து வாங்கும் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி
தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து வரும் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாலாஜி முருகதாஸ்
பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்ட காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருபவர் பாலாஜி முருகதாஸ். மாடலாக இருந்து தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சதீஷ் குமார் தயாரிப்பில் 'ஃபயர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் பாலாஜி முருகதாஸ் ஒரு ப்ளே பாயாக வலம் வருவது போல் காட்சியமைக்கப்பட்டு வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக தனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தபடியாக ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளில் வாரிசுகளை நடிக்கவைப்பதாக கூறி மறைமுகமாக விமர்சித்து இருந்தார். தற்போது திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரடியாக குறிப்பிட்டு அவரை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குடும்பமே உழல் குடும்பம்
My grandfather came to chennai in 1950 and your grand father also came on same time , my question is . @Udhaystalin dude you want me to believe that you never earned money by corruption? Really ?
— Balaji Murugadoss (@OfficialBalaji) August 23, 2024
Your whole family is corrupted. And whole TN knows that
சமீப காலங்களில் தனது எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து வருகிறார் பாலாஜி. அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை. வாரிசு அரசியலுக்கு தான் எதிரானவன் என்றும் அதனால் தான் திமுகவை வெறுப்பதாகவும் கருத்து பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக ஆதரவாளர்களுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
பாலாஜி முருகதாஸ் பதிவிட்ட கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.