மேலும் அறிய

பிக்பாஸ் வீட்டில் நுழையும் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்

Bigg Boss 9 Tamil : விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் பிரபல இசையமைப்பாளர் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்

இந்தி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்து தொடங்கி ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளன. இந்தியில் பிக்பாஸ் 19 ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதே நேரம் தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 9 ஆவது சீசன் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கன்னடத்தில்  கிச்ச சுதீப் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 12 ஆவது சீசன் செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா

பிக்பாஸ் தமிழிலின் 9 ஆவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க இருக்கிறது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.  இந்த சீசனில் கலந்துகொள்ள போகும்  போட்டியாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஶ்ரீகாந்த் தேவா தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு முதல் இசையமைத்து வருகிறார். விஜயின் சிவகாசி , எம் குமரன் S/O மகாலட்சுமி , ஜித்தன்  உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட்ட  படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் கருவறை என்கிற குறும் படத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது

பிக்பாஸ் தமிழ் 9 போட்டியாளர்

பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஒரு சில சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் சின்னத் திரை நடிகைகள் இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பலூன் அக்கா என சமூக வலைதளத்தில் வைரலான அரோரா , கூமாபட்டி தங்கபாணி ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் இனியா , நடிகர் புவி அரசு , வினோத் பாபு , குக் வித் கோமாளி ஷபானா , ஃபரினா ஆஸாத் , வி.ஜே பார்வதி , மகாநதி சீரியல் நடிகை லக்‌ஷ்மி பிரியா , திருமணம் சீரியல் நடிகர் சித்து சித் ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget