Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!
விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடும் விதமாக இன்னும் ஒரு படம் நடிக்க உள்ளேன். அதனுடன் சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். அப்படியான கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் காட்சிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படம்
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் நடிகர் விஜய்யின் 69வது படமாக உருவாகி வருகிறது.
விஜய்யின் கடைசி படம்
நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது அவர் கோட் என்ற படத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபடும் விதமாக இன்னும் ஒரு படம் நடிக்க உள்ளேன். அதனுடன் சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். அப்படியான கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தது.
1M+ LIKES for #ThalapathyKacheri 🔥
— KVN Productions (@KvnProductions) November 9, 2025
🧨 https://t.co/c8WvU6BQLj#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @Arivubeing @thedeol @_mamithabaiju #SekharMaster @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal… pic.twitter.com/TEIB6CKAsa
தளபதி கச்சேரி பாடல்
இந்த நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாடலாக தளபதி கச்சேரி பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை அனிருத்துடன், நடிகர் விஜய் இணைந்து பாடியிருந்தார். பாடலின் இறுதியில் 1 நிமிடங்களுக்கு தனது ரசிகர்களுக்காக பட்டையை கிளப்பும் வகையில் விஜய் டான்ஸ் ஆடியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுமாறும் சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பாணியில் காட்சிகள்
இந்த நிலையில் ஜனநாயகன் படம் முற்றிலும் அரசியல் படமாக இருக்கும் என பலர் எதிர்பார்த்தனர் . ஆனால் இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு படமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அரசியல் மற்றும் உணர்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 10 ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஹாலிவுட் பாணியில் இருக்கும் எனவும் விஜய்யின் கடைசி படம் அவருக்கு சினிமாவின் புரிய பரிணாமத்தை இட்டுச் செல்லும் எனவும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.





















