Baakiyalakshmi Serial Promo: சிக்குனான்டா சேகரு.. ஃபோனால் தப்பித்த கோபி.. நெருங்கி வந்த பாக்யா.. பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ..!
பாக்யலட்சுமியிடம் இருந்து தப்பிப்பதற்காக போனில் பேசுவது போல நடிக்கிறார் கோபி.. பின்னர் நடந்தது என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர் நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர். முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார். இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார்.
சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார். இதை பாக்யா கேள்வி கேட்க,கோபி அதை தனது அதட்டலால் அடக்கி விடுகிறார். கோபியை கேள்வி கேட்டு வந்த தாத்தாவும் தற்போது பக்கவாதத்தில் படுத்துவிட்டார். பாட்டிக்கு கோபி மீது கோபம் கொப்பளித்தாலும், தாத்தாவை கவனிப்பதிலேயே காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. செழியன் சுயநலவாதி என்பது அப்பட்டமாக தெரிந்தாயிற்று. சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது, பாக்கிய லட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. “ அந்த ப்ரோமோவில் ராதிகா கோபியை பாக்யாவிடம் அறிமுகப்படுத்த முயன்று அவரை அழைக்க ரூமுக்கு செல்கிறார். ரூமை நோக்கி ராதிகா வருவதை பார்த்த கோபி போன் பேசுவது போல நடிக்கிறார். எவ்வளோவா ராதிகா கூப்பிட்ட போதும், அவர் வராமல் போன் பேசிவிட்டு வருகிறேன் என்று சமாளிக்கிறார் கோபி.
இதனையடுத்து பாக்யாவிடம் செல்லும் ராதிகா, அவருக்கு ஆபிஸ் கால் இன்னும் முடியவில்லை என்று கூற, பாக்யா பராவாயில்லை இன்னொரு முறை வரும் போது பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். தொடர்ந்து தனது கல்யாணத்துக்கு வரவேண்டும் என பாக்யாவை ராதிகா கூப்பிட, ரூமில் இருந்து இதைக்கேட்டுக்கொண்டிருந்த கோபி எரிச்சலைடைகிறார்.