Nelson Dilipkumar Son Dance: அதே சேட்டை.. அரபிக்குத்துக்கு செம்ம குத்துகுத்திய நெல்சன் மகன்.. வைரல் வீடியோ..!
அரபிக்குத்து பாடலுக்கு நெல்சன் திலீப் குமாரின் மகன் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Nelson Dilipkumar Son Dance: அதே சேட்டை.. அரபிக்குத்துக்கு செம்ம குத்துகுத்திய நெல்சன் மகன்.. வைரல் வீடியோ..! Beast Director Nelson Dilipkumar Son Aathvik Dance For Vijay Arabic kuthu song Video Goes Viral On social Media- Watch Nelson Dilipkumar Son Dance: அதே சேட்டை.. அரபிக்குத்துக்கு செம்ம குத்துகுத்திய நெல்சன் மகன்.. வைரல் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/64153cf55fb008888491e280d5e0be79_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தின் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அண்மையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து லிரிக்கல் பாடல் வெளியானது.
வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்த இந்தப்பாடல் தற்போது வரை 47 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இணையத்தை அதகளப்படுத்தி வரும் இந்தப்பாடலுக்கு, பாடலில் விஜய் ஆடுவது போலவே பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்க, பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது பங்கிற்கு ரீல்களை வெளியிட்டனர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
அந்த வரிசையில் தற்போது படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் மகனான ஆத்விக்கும் நடமானடியிருக்கிறார். இந்த வீடியோவை நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷா நெல்சன் திலீப் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பிரபல நடிகரான கவினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)