படே மியான் சோட் மியான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு
படே மியான் சோட் மியான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![படே மியான் சோட் மியான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு Bade Miyan Chote Miyan to release in India on April 11 Akshay Kumar and Tiger Shroff படே மியான் சோட் மியான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/0eb49ad68c12f3440fa955ea7eb743e61712679456466729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bade Miyan Chote Miyan: அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படே மியான் சோட் மியான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.
படே மியான் சோட் மியான் படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு:
அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள படே மியான் சோட் மியான் இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈத் வெளியீடாக இருந்து வருகிறது. இதுவரை படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரையரங்கில் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்.
இந்தியாவில் ஈத் பண்டிகை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படமாக இருக்கும் வகையில் படத்தை பண்டிகை நாளில் மட்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அக்ஷய் மற்றும் டைகர் இடையேயான நட்புறவு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது, எனவே திரையரங்கில் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்ஷன் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
எதிர்பார்ப்பை எகிற வைத்த படம்:
கிரேக் மேக்ரே ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஆகியவற்றில் தனது அதிரடி காட்சிகளுக்காகவும் புகழ் பெற்றவர். 'படே மியான் சோட்டே மியான்' படம் குறித்து தயாரிப்பாளர் பேசுகையில், " ரசிகர்ளுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் இதுவரை பார்த்திராத ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக வெளியாக உள்ளது. வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை AAZ பிலிம்ஸ் உடன் இணைந்து வழங்குகிறார்கள்.
அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கியுள்ள இப்படம் வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. ஜீ மியூசிக் இப்படத்திற்கான இசை உரிமையை பெற்றுள்ளது.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 11, 2024 வியாழன் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்ஹா, அலையா எஃப், மனுஷி சில்லர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)