Sai Pallavi Video: "இதைத்தான் சொன்னேன்.. திரிக்கிறாங்க..பெரும் அழுத்தம்..” சாய்பல்லவி கொடுத்த அதிரடி விளக்கம்..
மதத்தின் அடிப்படையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
மதத்தின் அடிப்படையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து பிரபல நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
View this post on Instagram
சாய் பல்லவி தற்போது இன்ஸ்டாகிராம் வழியாக அளித்திருக்கும் விளக்கத்தில், “நான் பேசியது முழுவதுமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பலரும் அந்த வீடியோவை முழுவதுமாக கேட்கக்கூட இல்லை. அவரவர்களுக்கு ஏற்ற வகையில் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா வகையான வன்முறைகளையும் நான் அதில் கண்டித்திருக்கிறேன். மருத்துவம் படித்த பட்டதாரியான எனக்கு, எந்தவிதமான வன்முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
ஜாதி, மதம், பண்பாடு என எந்த வகையிலும் வேற்றுமையும், பாகுபாடும் காட்டாத பின்புலத்தில் நான் வளர்ந்தேன். சில நாட்களாக என்னை சுற்றி எழுந்த விவாதங்கள், என்னை பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. நான் சொன்னவற்றில் இருந்து பின்வாங்கவில்லை. எந்த வன்முறைக்கும் சார்பாக பேசவில்லை. வலதுசாரியா, இடதுசாரியா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நல்ல மனிதனாக இருப்பதே தீர்வு எனவே தெரிவித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மதத்தின் அடிப்படையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய
சாய் பல்லவி, “என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுதான்.
இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படத்தேவையில்லை.” என்று பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சாய் பல்லவி பேசியிருக்கிறார்.