Baba Re-release Suspense : கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றம்... வேற லெவல் ரீ -எடிட்டிங்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாபா!
2002ல் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப புது பொலிவுடன் இன்று திரையிடப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடிய இப்படத்தில் அவர்களுக்கு ஒரு பெரிய சஸ்பென்ஸ் காத்திருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான 'பாபா' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வகையில் புது பொலிவுடன் சில காட்சிகள் ரீ எடிட்டிங் செய்யப்பட்டு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு இன்று திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப்பொலிவுடன் வெளியான பாபா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வேற லெவலில் ரீ எடிட்டிங் :
மேலும் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தில் 7 மந்திரங்கள் ரஜினிக்கு கொடுக்கப்படும் ஆனால் ரீ-ரிலீஸ் திரைப்படத்தில் 5 மந்திரங்கள் மட்டுமே கொடுப்பது போல ரீ-எடிட்டிங் செய்துள்ளார்கள். அது மட்டுமின்றி கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒரு ட்விஸ்ட். முதலில் ரஜினி கிளைமாக்ஸில் மக்கள் பக்கம் செல்வதாக முடிவெடுப்பது போல கொஞ்சம் அரசியல் டச் வைத்து படத்தை முடித்து இருப்பார்கள். ஆனால் இந்த ரீ ரிலீஸ் படத்தில் மீண்டும் மறுஜென்மம் எடுத்து தாயின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்று என பாபா கூறுவது போல கிளைமாக்ஸ் காட்சி அமைத்து படத்தை நிறைவு செய்துள்ளார்கள்.
#Baba FDFS 🤘😍
— 𝕽𝖆𝖐𝖐𝖘 | 𝕳𝖞𝖕𝖊𝖉 𝖋𝖔𝖗 𝕭𝖆𝖇𝖆 🤘 (@kadalaimuttaai) December 10, 2022
Few Scenes & songs trimmed & few iconic fav dialogue's removed 🥲
Mantra's Reduced frm 7 to 5 🤘
Voice Over Added, Few Changes in BabaJi Portion (VFX) ❤️
Climax Changed 👌
Missed watching Baba in theater during childhood, now full filled 😎
Gud Experience ❤️ pic.twitter.com/ubtMZUOjQ3
நேற்று கலைவிழாவில் லதா ரஜினிகாந்த் :
சென்னையில் நேற்று சத்யம் திரையரங்கில் பாபா படத்தின் கலைவிழா நடைபெற்றதில் லதா ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணா, கவிஞர் வைரமுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் ' ரசிகர்களின் அன்பை பார்க்கும் போது மிகவும் எமோஷனலாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது இவர்களின் அன்பு பல மடங்காக இருக்கிறது. அவரை நேசிக்கும் அனைவருமே எங்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் குறித்த புரிதல் அதிகமாகேவே உள்ளது. அதனால் நிச்சயம் இப்படத்தை அனைவரும் ரசிப்பார்கள் என தெரிவித்தார்.
தமிழகமெங்கும் பாபா மறுவெளியீட்டின் அதிகாலை 4 மணி காட்சி அதுவும் அரங்கம் நிறைவாக.... https://t.co/IkaV653Gnu
— ராஜேஷ் (@SarathyVns) December 10, 2022