Baakiyalakshmi Serial : விபத்தில் சிக்கிய கோபி... ஒரே மொமெண்ட்டில் வந்த பாக்யா - ராதிகா.. அடுத்து இதுதானா?
கோபி அரை மயக்கத்தில் ராதிகா நம்பரையும் சொல்ல அங்கு வந்த மற்றொரு நர்ஸ் அவருக்கும் போன் பண்ணி விவரம் சொல்கிறார். உடனடியாக அவரும் முதலில் மருத்துவமனைக்கு வந்து கோபியை பார்க்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி விபத்தில் சிக்கிய நிலையில் இம்முறையும் அவர் தப்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.பாக்கியா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்கியா சோதனை செய்தது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் பாக்கியாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபி வீட்டில் நடந்த பிரச்சனையை தடுத்து பாக்கியாவை அழைத்து வர அவர் மகள் இனியா கடைக்கு சென்று நடந்ததை சொல்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் பாக்கியா, மகளுடன் வீட்டுக்கு திரும்பி வருகிறார். இதனிடையே மகள் மயூ பற்றி தனது தாயாரிடம் ராதிகா கவலைப்பட்டு கொண்டிருக்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மயூ பற்றி உனக்கு என்ன அக்கறை என கேட்க, அதற்கு கோபி-ராஜேஷ் இருவரும் வந்து பிரச்சனை செய்யுறதுக்கு நான் என்ன பண்ண? என ராதிகாவும் கேட்கிறார். அதற்கு தாயார் உன்னால இங்க எல்லாரும் கஷ்டப்படுறோம் என சொல்லிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.
இதற்கிடையில் வீட்டுக்கு திரும்பி வரும் கோபி விபத்தில் சிக்க பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு மருத்துவர் அவரிடம் வீட்டுக்கு போன் செய்து விவரம் சொல்ல நம்பர் கேட்க முதலில் மனைவி பாக்கியா நம்பரை கொடுக்கிறார். உடனடியாக நர்ஸ் பாக்கியாவுக்கு போன் செய்து விவரம் சொல்ல வீட்டுக்கு மகளுடன் வந்து கொண்டிருந்த அவர் இனியாவை வேலைக்காரி செல்வியுடன் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.
வீட்டுக்கு செல்வியுடன் வரும் இனியாவிடம் பாக்கியாவின் இளைய மகன் எழில் அம்மா குறித்து கேட்க போன் வந்ததும் சென்று விட்டார் என சொல்கிறார். நடந்ததை எல்லாம் சொல்லிட்டியா என கேட்க அதற்கு ஆமாம் நான் சொல்லிவிட்டேன் என இனியா தெரிவிக்கிறார். அப்போது செல்வி குறுக்கிட்டு நானும் கோபி சார் இன்னொரு பொண்ணு கூட போனதை பார்த்துருக்கேன். ஒருவேளை வீட்டுக்கு வந்து சண்டை போட்டது அந்த பொண்ணோட புருஷனாக இருக்கலாம் என தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு கோபியின் மூத்த மகன் செழியன் அப்பாவை பற்றி யாரும் தப்பாக பேச வேண்டாம் என கோபமாக கூறுகிறார்.
அதேசமயம் கோபி அரை மயக்கத்தில் ராதிகா நம்பரையும் சொல்ல அங்கு வந்த மற்றொரு நர்ஸ் அவருக்கும் போன் பண்ணி விவரம் சொல்கிறார். உடனடியாக அவரும் முதலில் மருத்துவமனைக்கு வந்து கோபியை பார்க்கிறார். அந்த சமயம் பாக்கியாவும் அங்கு வர நேற்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. இன்றைய எபிசோடில் மருத்துவமனையில் ராதிகாவை பாக்கியா பார்ப்பாரா, இல்லை கோபியின் மீதான குற்றச்சாட்டுக்கு அவரது அம்மா ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்