மேலும் அறிய

Baakiyalakshmi Serial: எமனாக வந்த கரண்ட் பில்...அடித்துக் கொண்ட செழியன்- எழில்...அதிர்ச்சியில் பாக்யா

எவ்வளவு பில் வருதுன்னு தெரியாமயா குடும்பம் நடத்துற  என சொல்ல, நான் பில் கட்டியிருக்கேன். 10 ஆயிரம் வரை வரும். ஆனால் 17 ஆயிரம் என்பது தான் ஷாக்கா இருக்கு என பாக்யா தெரிவிக்கிறார். 

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின்  இருமகன்களும் சண்டை போடும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

எமனாக வந்த கரண்ட் பில்

பாக்யாவை மரியாதை இல்லாமல் பேசியதாக இனியாவை எழில் கண்டிக்க, வெகுண்டெழுந்த ஈஸ்வரி அவரை திட்டுகிறார். உடனடியாக மூர்த்தி தலையிட்டு இனியாவின்  அண்ணன் எழில். அவனுக்கு அவளை கண்டிக்க எல்லா உரிமையும் இருக்கு. நீ எப்படா கேப் கிடைக்கும் பாக்யாவை திட்டலாம்ன்னு இருக்கியா என ஈஸ்வரியை அடக்குகிறார். கடைசியில் இனியா நான் ஸ்கூலுக்கு பஸ்லையே போய்க்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனைத் தொடர்ந்து வீட்டின் ஹாலுக்கு செழியனும், ஜெனியும் வருகின்றனர். அந்நேரம் பார்க்க கரண்ட் பில் ரீடிங் எடுக்கும் நபர் வருகிறார். அவர் வீட்டின் மின் கட்டணம் ரூ.17 ஆயிரம் என்பதை குறிக்க அதைக் கண்டு பாக்யா அதிர்ச்சியடைகிறார். 

அவரின் முகத்தைப் பார்த்து மூர்த்தி என்னவென்று விசாரிக்க மின் கட்டணம் குறித்து சொல்கிறார். உடனே செல்வி இவ்வளவா வருது..எங்க வீட்டுலையும் 400,500 வரும். இப்படி எல்லாம் வராது என தெரிவிக்க, மூர்த்தி இந்த வீட்டுல 4 ஏசி ஓடுது. பின்ன வராம என்ன பண்ணும் என கேட்கிறார். இதுதான் நேரம் என மீண்டும் ஈஸ்வரி பாக்யாவை குத்திக் காட்டுகிறார். எவ்வளவு பில் வருதுன்னு தெரியாமயா குடும்பம் நடத்துற  என சொல்ல, நான் பில் கட்டியிருக்கேன். 10 ஆயிரம் வரை வரும். ஆனால் 17 ஆயிரம் என்பது தான் ஷாக்கா இருக்கு என பாக்யா தெரிவிக்கிறார். 

கோபி இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா..இதெல்லாம் தெரிய விட்டுருப்பானா என ஈஸ்வரி சொல்ல, செழியனும் அதுதான் சரி என்கிறார். இதனால் கடுப்பாகும் ஜெனி, செழியனிடம் சண்டைக்கு செல்கிறார். அதேசமயம் மூர்த்தி, கோபி பாக்யாவிடம் எந்த வரவு, செலவு குறித்து சொல்லாமல் இருந்தது அவன் தப்பு. நீ இதுதான் சான்ஸ்ன்னு பாக்யாவை குத்தம் சொல்லாத என மூர்த்தி மீண்டும் மீண்டும் ஈஸ்வரியை கண்டிக்கிறார். 

அடித்துக் கொண்ட செழியன்- எழில்

செழியன் பேசுறதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எழில், நீயும் தான இந்த வீட்டுல இருந்த உனக்கு மட்டும் இவ்வளவு வருதான்னு தெரியுமா என கேட்க, இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனை மூர்த்தி தடுத்து இருவரையும் திட்டி அனுப்புகிறார். உடனே ஈஸ்வரி இப்ப உனக்கு சந்தோஷமா..நல்லா இருந்த குடும்பத்தை இப்படி கொண்டு வந்து நிறுத்திட்ட.. இதுக்கே நாம இப்படி கூடி பேசுறோம். இன்னும் என்னல்லாம் பார்க்க போறோமோ என சொல்லிக்கொண்டே செல்கிறார். 

இதனையடுத்து ஜெனியும், செல்வியும் பாக்யா பேசாமல் அமைதியாக இருப்பது பற்றி கேட்கிறார்கள்.ஆனால் தான் சொன்னதை செய்தால் இவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். அதுவரை என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என கூறுகிறார். இதனையடுத்து செழியனிடம் ஜெனி கோபமாக கரண்ட் பில் நீ வாங்கி கட்டலாம்ல..நீ இப்படி பேசுறது எனக்கு பயமா இருக்கு என சொல்கிறார். இதைக்கேட்டு செழியன் நான் இந்த வீட்டுக்கு ஏற்கனவே கொடுக்குற பணத்தை மட்டும் தான் நான் கொடுப்பேன். நீ வந்து எனக்கு சொல்லாத என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்வது போல  இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
Embed widget