Baakiyalakshmi Serial: “முதல்ல வெளியே போங்க”...ராட்சசியாக மாறிய ராதிகா...அதிர்ச்சியில் ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து செய்தி அறிந்து ஈஸ்வரி வீட்டுக்கு ஜெனியின் அம்மா வந்து விசாரிக்கும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து செய்தி அறிந்து ஈஸ்வரி வீட்டுக்கு ஜெனியின் அம்மா வந்து விசாரிக்கும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
ராதிகா வீட்டுக்கு செல்லும் ஈஸ்வரி கோபியை ஒளித்து வைத்து விட்டு என்கிட்ட அவர் இங்க இல்லன்னு கதை சொல்றீங்களா என கேட்டு ஒவ்வொரு ரூம் ஆக போய் தேடுகிறார். இதற்கு ராதிகாவின் அண்ணன் மற்றும் அம்மா எதிர்ப்பு தெரிவிக்க ஈஸ்வரி அவர்களிடம் சண்டை போடுகிறார். இதனால் அமைதியாக இருந்த ராதிகா, எல்லாத்துக்கும் காரணம் உங்க பையன் தான. எதுனாலும் அவர்கிட்ட போய் கேளுங்க. முதல்ல இங்கிருந்து வெளியே போங்க என சொல்கிறார். ஈஸ்வரி கோபத்தில் அங்கிருந்து செல்கிறார்.
வீட்டுக்கு செல்லும் ஈஸ்வரி மூர்த்தியிடம் தான் ராதிகா வீட்டுக்கு சென்றதை கூறி ஆதங்கப்படுகிறார். இதுக்கெல்லாம் பாக்யா தான் காரணம் என கூற, மூர்த்தி கோபமடைந்து ஈஸ்வரியை திட்டுகிறார். கோபி ஒரு தப்பு பண்ணி தான் இந்த வீட்டை விட்டு வெளியே போனான். இப்ப வெளியே போய் அதே தப்பை தான் பண்றான். நீ பாக்யாவை தப்பு சொல்லாத என கூறுகிறார். இதற்கிடையில் விவாகரத்து விஷயம் கேள்விப்பட்டு பாக்யா வீட்டுக்கு வரும் ஜெனியின் அம்மா மரியம் நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா. இந்த வயசுல இதெல்லாம் தேவையா என கேட்க ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைகிறது.
யாரோ ஒருத்தர் சொல்லி எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிது என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அம்மாவை ரூமுக்குள் அழைத்துச் சென்று ஏன் இங்க வந்தீங்க.இங்க நிலைமை சரியில்ல என ஜெனி கோபப்படுகிறார். உடனே செழியன் பாக்யாவிடம் இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே...இன்னிக்கு ஜெனி அம்மா வந்தாங்க..நாளைக்கு நம்ம சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா வந்து கேட்கப் போறாங்க என ஆதங்கப்படுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.